தமிழ் – பெயர் காரணம்

தமிழ்மொழி தனது இனிமையான பெயரை எப்படிப் பெற்றது என்பதை அறிஞர்கள் பலர் பலவாறு ஆய்ந்து உரைக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்கள் ஒவ்வொன்றும் பெருமிதம், வியப்பு, களிப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. அத்தகைய சுவைமிகுந்த காரணங்களில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

0 Comments

நாவில் இனிக்கும் நளவெண்பா

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இந்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்

மேலும் படிக்க

0 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியர சாணை, பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய், குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே! - மகாகவி…

0 Comments

பாவேந்தர் புகழ் வெண்பா

பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!

தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.

மேலும் படிக்க

2 Comments

புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

0 Comments

அருளுள்ளம் கொண்ட இறைவர் திருமகன் – இயேசுபிரான் புகழ் பாட்டு

விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்!
அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
அருகில் தோன்றிடும் நற்பர லோகமே!

0 Comments

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் - கடற்
    காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே - பிணி
   பறந்திட உடல்வளம் கூடிடுவோம்.

0 Comments

ஆழ்வார்கள் நான்மணிமாலை – மதுரகவியார், மழிசையார்

இந்தப் பதிவு 'ஆழ்வார்கள் நான்மணிமாலை' என்னும் தொடரின் இரண்டாம் பகுதி. இந்தப் பகுதியில், இனித்திடும் எளிய கவிதைகளால் மாறன் புகழ்பாடி 'நாவினால் நவிற்றின்பம் எய்திய' மதுரகவி ஆழ்வாரைப் போற்றியும், 'பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்' என்று ஆணையிட்டு, இறைவனையே காஞ்சி நகரிலிருந்து இடம் பெயர வைத்த திருமழிசை ஆழ்வாரின் கவியாற்றலைப் புகழ்ந்தும் அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

மேலும் படிக்க

0 Comments

ஆழ்வார்கள் நான்மணிமாலை – குருகூர் சடகோபர்

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அத்தகைய சிறப்புடைய ஆழ்வார்களைப் போற்றி நான்மணிமாலையாக இங்கு அளித்துள்ளேன்.

சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்தபெரி யோர்பெருமை சாற்றிடவே – சிந்தையினில்
வற்றாத அன்பால் மணிமாலை நான்மொழியத்
தொற்றமிழ்த்தாய் நிற்பாள் துணை.

மேலும் படிக்க

0 Comments

End of content

No more pages to load