நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
26 Comments

திருஞானசம்பந்தர்

ThirugnanaSambandar - திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் காப்பு வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.…

மேலும் படிக்கதிருஞானசம்பந்தர்
9 Comments

அருகன் அடியே சரணம் – சமண சமயக் கடவுள் துதி

அருகன் அடியே சரணம் பாவகை : சந்த விருத்தம்சந்த அமைப்பு : தனனா தனனா தனனா தனனா / தனனா தனனா தனனா திருவிற் பொலிமுக் குடைமா நிழலில்   திகழா சனமீ தமர்வான்மருளுற் றிடுமைம் பொறிவாய் அறவே   மறுவிற் சுடர்போல் ஒளிர்வான்முரணுற் றிடுமூ வெயிலைச்…

மேலும் படிக்கஅருகன் அடியே சரணம் – சமண சமயக் கடவுள் துதி
0 Comments

நால்வர் வெண்பா மாலை – கவிதை நூல்

நால்வர் வெண்பா மாலை - PDF நால்வர் வெண்பா மாலை - நூல் முகவுரை நால்வர் வெண்பா மாலை என்னும் இந்நூல் சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் புகழ் பாடும் வெண்பாக்களைக் கொண்டு…

மேலும் படிக்கநால்வர் வெண்பா மாலை – கவிதை நூல்
0 Comments

முருகா என்னும் திருநாமம் – ஒரு சிந்துக் கவிதை

முருகன் பாட்டு முருகா என்னும் திருநாமம் - ஒரு சிந்துக் கவிதை 1. முருகா வென்னும் திருநாமம் - அதை மொழிவார் வெல்வார் வினையாவும்உருகும் நெஞ்சுக் குரமாகும் - தொழு(து) உரைப்பார்க் கென்றும் உயர்வாகும். (முருகா என்னும்) 2. பொருளே தேடிப் பொழுதொழிக்கும் - ஒரு பொருளில்…

மேலும் படிக்கமுருகா என்னும் திருநாமம் – ஒரு சிந்துக் கவிதை
0 Comments

திருமால் துதிகள்

1. ஆயிரம் பேருடையாய் ஆயிரம் சீர்க்குணத்தாய் ஆயிரம் பேழ்வாய் அரவணையாய் - ஆயிரம் குன்றனைய தோளினாய் கூறும் அடியோமுக்(கு) இன்றருளாய் பள்ளி எழுந்து. 2. மதுராஷ்டகம் - அதரம் மதுரம் - தமிழில் இதழும் இனிதாம் முகமும் இனிதேஇதமார் விழியும் நகையும்…

மேலும் படிக்கதிருமால் துதிகள்
0 Comments

 மதுரை மீனாட்சி அம்மை பதிகம்

  மதுரை மீனாட்சி அம்மை பதிகம் மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மையின் பெருமையைப் போற்றித் துதிக்கும் தமிழ்மாலை. கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம் (விளம், விளம்,விளம், விளம், விளம்,மா,தேமா- அரையடிக்கு) 1. திருவளர் மரகத மணியொளிர்…

மேலும் படிக்க மதுரை மீனாட்சி அம்மை பதிகம்
0 Comments

ஜேகே குறள் – ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்மொழிகள் குறள் வடிவில்

1. பிறர்தரத் தான்கொண்ட பேரறிவின் தன்னுள் உறக்கண்ட உண்மை உயர்வு. கருத்து: பிறர் போதிக்கத் தான் கேட்டறிந்து கொண்ட ஞானத்தை விடத் தானே தனக்கு ஒளியாக இருந்து தனக்குள் கண்டுணர்ந்த உண்மை உயர்வானது.  2. நினைவரிய மெய்ம்மை எனுமோர் நிலத்தை இனிதடையப் பாதையொன் றில்.…

மேலும் படிக்கஜேகே குறள் – ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்மொழிகள் குறள் வடிவில்
0 Comments

அஷ்டலட்சுமி விருத்தம்

அஷ்டலட்சுமி விருத்தம் வடமொழியில் அமைந்த அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தைத் தழுவித் தமிழில் எழுதிய விருத்தங்கள் கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்வாய்பாடு : விளம் மா விளம் மா / விளம் விளம் மா 1. ஆதிலட்சுமி அற்புத வடிவே…

மேலும் படிக்கஅஷ்டலட்சுமி விருத்தம்
0 Comments

காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்

காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம் கவிதை : இமயவரம்பன் பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் Sri Kaakkalur Veera Anjaneyar Pathigam 1. கடற்பரப் பினைக்க டந்து... கடிநகர் கெடக்க டிந்து படைபொரு(து) இகல்க டந்த... பாதமே புகழ்ந்து நின்றேன்வடிவுயர் ஆஞ்ச…

மேலும் படிக்ககாக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்
0 Comments