ஆழ்வார்கள் நான்மணிமாலை – மதுரகவியார், மழிசையார்

இந்தப் பதிவு 'ஆழ்வார்கள் நான்மணிமாலை' என்னும் தொடரின் இரண்டாம் பகுதி. இந்தப் பகுதியில், இனித்திடும் எளிய கவிதைகளால் மாறன் புகழ்பாடி 'நாவினால் நவிற்றின்பம் எய்திய' மதுரகவி ஆழ்வாரைப் போற்றியும், 'பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்' என்று ஆணையிட்டு, இறைவனையே காஞ்சி நகரிலிருந்து இடம் பெயர வைத்த திருமழிசை ஆழ்வாரின் கவியாற்றலைப் புகழ்ந்தும் அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

மேலும் படிக்க

0 Comments

ஆழ்வார்கள் நான்மணிமாலை – குருகூர் சடகோபர்

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அத்தகைய சிறப்புடைய ஆழ்வார்களைப் போற்றி நான்மணிமாலையாக இங்கு அளித்துள்ளேன்.

சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்தபெரி யோர்பெருமை சாற்றிடவே – சிந்தையினில்
வற்றாத அன்பால் மணிமாலை நான்மொழியத்
தொற்றமிழ்த்தாய் நிற்பாள் துணை.

மேலும் படிக்க

0 Comments

அருட்பா அளித்த அருளாளர் – வள்ளலார் புகழ் மாலை

வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்' என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க.

மேலும் படிக்க

0 Comments

நாவுக்கரசர் வெண்பா

கூற்றம் நடுங்கக் குரலெடுத்தான், யாரிடமும்
போற்றிப் பணிந்தடிமை பூணாதான் - ஏற்றமுற
நாவுக் கரசன் நவின்றுரைக்கும் நன்மொழிதான்
ஆவிக்(கு) அமுதென்(று) அறி.

மேலும் படிக்க

0 Comments

சின்னச் சின்னத் தேனீக்கள்

சின்னச் சின்னத் தேனீக்கள்
   சிரித்துப் பறக்கும் தேனீக்கள்
மின்னும் அழகு மலர்தேடி
   மிகுந்த தேனைச் சேகரிக்கும்

மேலும் படிக்க

0 Comments

கருமேகம் காட்டும் உருவங்கள்

கரிய மேகம் பெரிய வானில்
கவலை இன்றி திரியுது
காற்றும் நீரும் குடித்து விட்டுக்
கனத்துப் பெருத்து மிதக்குது!

மேலும் படிக்க

2 Comments

போதி நிழல் புனிதன் – புத்தரின் போதனைகள்

போதியம் திருநிழல் புனிதன், மாரனை வெல்லும் வீரர், மாயையைத் விலக்கும் சோதி, பூரணம் அடைந்த தேவர் என்று போற்றப்படும் சாக்கிய முனியாம் கௌதம புத்தரின் போதனைகள் மற்றும் ஆன்ம சாதனைகள் பற்றிப் புகழ்ந்திசை பாடும் கவிதைகள் இங்கே!

மேலும் படிக்க

0 Comments

புகழேந்தி விருத்தம் – புகழேந்திப் புலவர் வாழ்த்துப் பாடல்கள்

நிடத மன்னன் நளன் கதை கூறும் நளவெண்பா என்னும் தேன்சுவைக் காவியத்தைப் போற்றியும், அத்தகைய நன்னூலை அளித்த புகழேந்திப் புலவரின் பெருமையைப் பற்றியும் பாடும் பாடல்களை இங்கு அளித்துள்ளேன். இந்தப் பாடல்கள் கலிவிருத்தம் என்னும் இசை நிறைந்த பாவகையில் புனையப் பட்டவை.

மேலும் படிக்க

0 Comments

உள்ளம் கவரும் கள்வர் – ஞான சம்பந்தர்

செந்தமிழுக்குச் சந்தம் சேர்த்த பாவலர்களில் முதன்மையானவர் திருஞான சம்பந்தர். யாழினிக்கப் பாடும் இசைப்புலவரான சம்பந்தப் பெருமானைப் போற்றிப் பாடும் இவ்வெண்பாக்கள்.

மேலும் படிக்க

0 Comments

End of content

No more pages to load