கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி

அன்பின் வழி

‘அன்பின் வழி’ என்னும் இந்தப் பதிவில், ‘நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்’ என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம்.

அன்பின் வழி

சிந்தனை என்பது சிந்திப்பவரினால் வரையறுக்கப்பட்ட ஒன்றே. சிந்திப்பவரோ என்றென்றும் கட்டுண்டு இருப்பவர்; விடுபட்ட மனநிலையில் இருக்க மாட்டார். இந்நிலையில், சிந்தனை உதிக்கும்போது கூடவே அதுபற்றிய கருத்தும் தோன்றுகிறாது.  ஒரு கருத்தை முன்னிலைப்படுத்திச் செயல் செய்தல் என்பது குழப்பத்தையே அதிகரிக்கச் செய்யும்.  

இவ்வுண்மை தெளிந்தபின், ‘கருத்தில்லாமல் செயலாற்ற முடியுமா?’ என்னும் கேள்விக்கு வருவோம். இதற்கு விடை ‘முடியும்’ என்றால், அதுவே அன்பின் வழி என்றும் நாம் அறியலாம். ஏனெனில், அன்பு என்பது ஒரு கருத்தல்ல; உள்ளுணர்ச்சியும் அல்ல; கடந்த கால நினைவும் அல்ல; தன்னைப் பாதுகாக்கும் மனக்கருவியான தள்ளிவைப்பும் அல்ல;  நாம் கருத்தின் ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும்போதுதான் அன்பின் வழியை உணரமுடியும்.  இப்போது, (நாம் ஏற்கனவே முயன்று பார்த்த) மற்ற வழிகளையெல்லாம் விட்டுவிட்டு, நம்மைத் (துயரத்திலிருந்து) மீளவைக்கும் அன்பின் வழியைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள முடியுமா? ஏனென்றால், அரசியல் ரீதியாகவோ மத ரீதியாகவோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிகள் வேறு எதுவும் இல்லை; அன்பின் வழியே நம்மை விடுவிக்கும் வழியாம். இது நீங்கள் சிந்தனை செய்து பார்த்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய தத்துவம் இல்லை; நிதர்சனமான உண்மை.

நீங்கள் அன்பு காட்டும்போது, ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு அதன் பொருட்டு அன்பு செய்கிறீர்களா? (அல்லது, கருத்துக்களை எல்லாம் மனத்தில் நீக்கிப் பார்க்கும்போதுதான் அன்பு என்பது தோன்றுமா?)  நான் சொல்வதை உடனடியாக ஏற்கவேண்டாம்; இதை உற்று நோக்குங்கள், ஆராய்ந்து பாருங்கள்,  ஆழ்ந்து அலசுங்கள். ஏனெனில், மற்ற வழிகளையெல்லாம் நாம் முயன்றிருந்தாலும், எவ்வாறு துயரத்தைப் போக்கலாம் என்ற கேள்விக்கு விடை கிட்டுவதில்லை. அரசியல்வாதிகள்  நம் துயர்துடைத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்; நிறுவனமாக்கப்பட்ட மதங்களோ நம் வருங்கால இன்பத்திற்கு உத்தரவாதம் கொடுக்கின்றன;  ஆனால் நமக்கிருப்பது நிகழ்காலம் மட்டுமே; இந்த நேரம் பசியோடு இருக்கும்போது எதிர்காலம் என்பது நமக்கு முக்கியமாகப் படுவதில்லை. 

மற்ற எல்லா வழிகளையும் முயன்று பார்த்துவிட்டோம்; அன்பின் வழியை மட்டும் நாம் அறிந்து கொள்ளவில்லை. கருத்துக்கள் பாய்கின்ற வழியை அறிந்து கொண்டு அவற்றால் வரும் தீமையை உணர்ந்து கருத்துக்களையெல்லாம் தள்ளிவைத்து செயலாற்றினால் ஒழிய, அன்பின் வழியை அறிதல் அரிதாகும்.

Acting without idea is the way of love

Thought must always be limited by the thinker who is conditioned; the thinker is always conditioned and is never free; if thought occurs, immediately idea follows. Idea in order to act is bound to create more confusion. Knowing all this, is it possible to act without idea? Yes, it is the way of love. Love is not an idea; it is not a sensation; it is not a memory; it is not a feeling of postponement, a self protective device. We can only be aware of the way of love when we understand the whole process of idea.Now, is it possible to abandon the other ways and know the way of love which is the only redemption? No other way, political or religious, will solve the problem. This is not a theory which you will have to think over and adopt in your life; it must be actual…

When you love, is there idea? Do not accept it; just look at it, examine it, go into it profoundly; because every other way we have tried, and there is no answer to misery. Politicians may promise it; the so called religious organizations may promise future happiness; but we have not got it now, and the future is relatively unimportant when I am hungry. We have tried every other way; and we can only know the way of love if we know the way of idea and abandon idea, which is to act.

‘தினம் ஒரு ஜேகே சிந்தனை’ என்னும் இந்தப் பதிவுத் தொடரில் இடம்பெறும் எழுத்துக்கள், ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘The Book of Life: Daily Meditations with Krishnamurti‘ என்னும் புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.

Leave a Reply