தமிழழகில் மனமயங்கிக்
கவியெழுதிப் பிதற்றுபவன்,
தமிழ்க்கவிதை நயம்வியந்துக்
கருத்தளித்து விளக்குபவன்.

தமிழ்க்கவிதை பலரறியத்
தரணியெலாம் பரப்புபவன்,
தமிழார்வம் கொண்டோர்க்குத்
தலைவணங்கும் தமிழன்பன்!

தத்துவங்கள் பல அலசிப்
பேருண்மைத் தேடுபவன்,
சித்தமெலாம் புரட்சியெழச்
செய்நூல்கள் பயிலுபவன்.

மனிதரிடைப் பிரிவுகளை
மறுக்கின்ற மனமுடையேன்,
அனைவரிலும் ஒளிர்கின்ற
அரும்பொருளை வணங்கிடுவேன்.

இமயவரம்பன்

Leave a Reply