ஓஷோவின் தத்துவங்கள்

ஓஷோ

ஓஷோ

பன்னூல் பயின்ற பரம ஞானி;
தத்துவம் தேர்ந்த தனிப்பெரும் சித்தர்;
நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்;
ஒப்புயர்வற்ற சிந்தனையாளர்;
நகைச்சுவை பொங்க நயம்பட உரைக்கும் சொற்பொழிவாளர்.

வாழ்வை வளமுற வழிசொல்லும் ஓஷோவின் புகழை வளமுற்ற வண்தமிழில் நான் வடித்த இன்கவிகள் இங்கே!

 தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
 வானென விரிந்திடும் சுடரறிவு
   வாளென வீழ்த்திடும் மடமைதனை
 ஏனெனக் கேட்டே எதிர்த்துநிற்கும்
   எழுச்சி மிகுந்தது இவரிதயம்
 ஞானம் நிறைந்திடும் வதனத்தால்
   ஞாலம் கவர்ந்துயர்ந்தார் ஓஷோ!

 இரவியின் ஒளியினைத் தோற்கடிக்கும் 
   இருவிழி துயர்தனை வென்றழிக்கும்
 உரைமொழி எல்லாம் உவப்பளிக்கும்
   உணர்வு கலந்துயிர்க் களிப்பளிக்கும்
 அருமறை நூல்கள்பல் லாயிரத்தின்
   அர்த்தம் அனைவர்க்கும் புரிந்திடவே
 பரிவுடன் பலமதச் சாரத்தினை
   பாருக்கு அளித்தொளிர்ந்தார் ஓஷோ!

Leave a Reply