ஓஷோ கும்மி
குவலயம் ஏத்திடக் கும்மியடி
இம்மையிலும் இங்கே ஏழேழ் பிறப்பிலும்
இன்பம் பெற்றோம் என்று கும்மியடி
ஓதற்கரிய உபநிடதம் – அதன்
உட்பொருள் சொல்லும் உரைமொழிந்தார்
போதிப் புனிதனின் தம்மபதம் – அதைப்
போற்றிக் கருத்து மழைபொழிந்தார்.
காதலின் பாதையில் கால்நடந்தே – உயர்
கடவுளைக் காணலாம் என்றுரைத்தார்
வேதங்கள் ஒன்றும் விளக்காத – அன்பின்
மேன்மை நமக்கிங்கு எடுத்துரைத்தார்
பாடிக் களிக்கும் பரவசத்தால் – அந்தப்
பரமனைப் பக்கத்தில் ஈர்த்திடலாம்
ஆடிக் கலந்திடும் ஆழ்நிலையில் – இந்த
அண்டத்தின் சக்தியை நாம்பெறலாம்.
வாழ்வை மகிழ்வுடன் கொண்டாடு – வாழ்க்கைப்
போகின்ற போக்கினில் போகவிடு
தாழ்வு நிலையெல்லாம் மாறிவிடும் – வாழ்வைத்
தாக்கிய தீமைகள் ஓடிவிடும்
ஓஷோ மொழிந்திட்ட தத்துவங்கள்- இந்த
உலகம் அறிந்துணர்ந்து இன்புறவே
ஓசை இனித்திடும் செந்தமிழின் – புகழ்
ஓங்க உரைத்திட்டேன் கும்மிகளே!
ஓஷோ விருத்தம்
தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
வாளென வீழ்த்திடும் மடமைதனை
ஏனெனக் கேட்டே எதிர்த்துநிற்கும்
எழுச்சி மிகுந்தது இவரிதயம்
ஞானம் நிறைந்திடும் வதனத்தால்
ஞாலம் கவர்ந்துயர்ந்தார் ஓஷோ!
இரவியின் ஒளியினைத் தோற்கடிக்கும்
இருவிழி துயர்தனை வென்றழிக்கும்
உரைமொழி எல்லாம் உவப்பளிக்கும்
உணர்வு கலந்துயிர்க் களிப்பளிக்கும்
அருமறை நூல்கள்பல் லாயிரத்தின்
அர்த்தம் அனைவர்க்கும் புரிந்திடவே
பரிவுடன் பலமதச் சாரத்தினை
பாருக்கு அளித்தொளிர்ந்தார் ஓஷோ!
1. ஆன்மாவின் ஏக்கம்
ஒலியற்ற இசைகேட்க உள்ளுணர்(வு) ஏங்கும்!
நிசமுண்டு உடலற்ற காதல் – நம்
நெஞ்சம் அவ்வுடலிலாக் காதலுக்(கு) ஏங்கும்!
இசைவுற்ற உருவொன்றும் இன்றி – உயர்ந்து
இலங்கிடும் தெளிந்ததோர் ஒப்பற்ற மெய்ம்மை!
நசையற்ற உருவிலா மெய்ம்மை – அதை
நாடி அலைந்துத் துடித்கும்நம் ஆன்மா!
(நிசமுண்டு = நிச்சயம் உண்டு; இசைவுற்ற = பொருந்துகின்ற; இலங்கிடும் = விளங்கும்; நசையற்ற = குற்றமற்ற)
பாவகை : ஆனந்தக் களிப்பு மெட்டு
Osho’s original poem:
There is a music which has no sound,
the soul is restless for such silent music.
There is a love in which the body is not,
the soul longs for such unembodied love.
There is a truth which has no form,
the soul longs for this formless truth.
2. கடலை நிரப்பச் சிறு துளிகள் போதும்
அமைதிதிகழ் மதவுணர்வுக்(கு) ஏங்கும் போதும்,
உள்ளிருளைக் கவ்விடும் சூரியனின் தோற்றம்
ஒருநாள்நீ கண்டிடுவாய்! மனம் கலங்காய்!
உள்ளொளிர் தாகத்துடனே துதித்து நிற்பாய்
உழைப்புடனே காத்திருந்து நம்பிக் கைவை!
வெள்ளமெனப் பொங்கும்கடல் துளிகள் சேர,
வெகுதூரம் சென்றிடச்சிற் றடிகள் போதும்!
(வெள்ளமெனப் பொங்கும்கடல் துளிகள் சேர = ‘துளிகள் சேர கடல் வெள்ளமெனப் பொங்கும்’ என்று பொருள் கொள்ளவும். அதாவது, சிறு துளிகள் சேரச் சேர பெரும் கடலையும் நிரப்புவிடலாம்)
பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்
Osho’s original poem:
When the heart thirsts so much for truth, for peace, for religion,
One day you come face to face with the sun
Which dispels all life’s darkness.
Thirst! Pray! Strive! Wait!
A journey of a thousand miles is covered
By small step, so don’t lose heart.
Vast distances can be covered one step at a time,
And an ocean filled drop by drop.
2. கடலை நிரப்பச் சிறு துளிகள் போதும்
அமைதிதிகழ் மதவுணர்வுக்(கு) ஏங்கும் போதும்,
உள்ளிருளைக் கவ்விடும் சூரியனின் தோற்றம்
ஒருநாள்நீ கண்டிடுவாய்! மனம் கலங்காய்!
உள்ளொளிர் தாகத்துடனே துதித்து நிற்பாய்
உழைப்புடனே காத்திருந்து நம்பிக் கைவை!
வெள்ளமெனப் பொங்கும்கடல் துளிகள் சேர,
வெகுதூரம் சென்றிடச்சிற் றடிகள் போதும்!
(வெள்ளமெனப் பொங்கும்கடல் துளிகள் சேர = ‘துளிகள் சேர கடல் வெள்ளமெனப் பொங்கும்’ என்று பொருள் கொள்ளவும். அதாவது, சிறு துளிகள் சேரச் சேர பெரும் கடலையும் நிரப்புவிடலாம்)
பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்
Osho’s original poem:
When the heart thirsts so much for truth, for peace, for religion,
One day you come face to face with the sun
Which dispels all life’s darkness.
Thirst! Pray! Strive! Wait!
A journey of a thousand miles is covered
By small step, so don’t lose heart.
Vast distances can be covered one step at a time,
And an ocean filled drop by drop.
3. நித்தியத்தை நாடு
அசைகையிலே அசைவில்லா சிந்தை மெய்ம்மை
மாற்றமதில் மாறாநித் தியமே மெய்ம்மை
மற்றெவையும் கனவுகளின் அலைகள் தாமே!
தோற்றமெனக் காணுகின்ற சகமும் கூட
தூக்கநிலை வரும்கனவின் தோற்றம் தானே!
தூற்றியந்த கனவினையே ஒதுக்கா(து) அந்தத்
தொடர்கனவை விழித்துணர்ந்தால் எல்லாம் மாறும்.
மாறாநித் தியமே = மாறா + நித்தியமே;
தோற்றமெனக் காணுகின்ற சகம் = நம் கண்முன்னே நாம் காட்சியாகக் காணுகின்ற இந்த உலகம்;
தூக்கநிலை வரும்கனவு = தூக்கநிலையில் வருகின்ற கனவு;
தூற்றியந்த கனவினையே ஒதுக்காது = அந்தக் கனவின் பொய்ம்மையை வெறுத்து அந்தக் கனவு நிலையை விட்டு நீங்க முயலாமல்;
அந்தத் தொடர்கனவை விழித்துணர்ந்தால் = தொடர்ந்து நிகழும் அந்தக் கனவை நாம் விழிப்புணர்வோடு பார்ப்போமானால்)
பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்
Osho’s original poem:
That which is inaction in action,
Stillness in motion, eternity in change,
That is truth, and that is existence.
Real life lies in this eternity,
Everything else is just the stream of dreams.
In truth the world is just a dream
And the question is not whether to leave these dreams or not,
One has just to be aware of them.
With this awareness, everything changes.
(Thanks : http://www.pilgrimsofemptiness.com/poemsosho.html)