கரிய மேகம் பெரிய வானில்
   கவலை இன்றி திரியுது
     காற்றும் நீரும் குடித்து விட்டுக்
       கனத்துப் பெருத்து மிதக்குது!

 உருவம் மாறி நிறம் வெளுக்கும்
   திறமை உடைய மேகத்தை
     உற்றுப் பார்த்த சிறுவர் கூட்டம்
       உரைக்கும் கற்பனை கேட்டீரோ?

 ஒருவன் யானை உருவம் என்றான்
   ஓடம் என்றான் மற்றொருவன்
     உயர்ந்து பறக்கும் பறவை என்றே
       உவந்து சிறுமி உரைக்கின்றாள்!

 கரடியின் உருவம் கண்டான் ஒருவன்
   கருத்துக் கிடக்கும் மேகத்தில்
     கருத்தாய் நாட்டை விரும்பும் ஒருவன்
       கண்டான் இந்திய வரைபடமே!

This Post Has 2 Comments

 1. Kalyanaraman

  Nice

  1. இமயவரம்பன்

   Thank you, Kalyan!

Leave a Reply