ஆழ்வார்கள் நான்மணிமாலை – பெரியாழ்வார்

இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் கவித்தொடரின் நான்காம் பகுதி. இந்தப் பகுதியில், பரந்தாமனுக்குப் பல்லாண்டு பாடிய பேருள்ளம் கொண்ட பெரியாழ்வாரைப் போற்றிப் புகழ்ந்து அந்தாதியாகப் பாடியுள்ளேன். நேரிசை வெண்பா மாலிருஞ் சோலை மலைக்காட்டின் பேரழகும் கோலவாய் ஊதும் குழலழகும் -…

0 Comments

ஆழ்வார்கள் நான்மணிமாலை – ஆண்டாள்

இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் கவித்தொடரின் மூன்றாம் பகுதி. இந்தப் பகுதியில், திருப்பாவை அருளிய திருமகளாம் ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்து அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

நேரிசை வெண்பா

வையம் விழிக்க மணிவிளக்காம் நற்பாவை
உய்ய உலகுக் குவந்தளித்தாள் - பொய்யற்ற
காதலால் நெஞ்சம் கசிந்துருக வைத்திடுமே
கோதை கொடுத்தத் தமிழ்.

0 Comments

ஶ்ரீ ரமணர் அகவல் – ரமண மகரிஷியின் ஞானமொழிகள்

வாழ்க்கை வளம்பெற ஆன்ம விசாரம் ஒன்றே வழி; 'நான் யார்' என்று தன்னை வினவிப் பார்த்தால் விவேகம் பிறக்கும் என்றார் ரமணர்.அவரைப் போற்றும் அகவல் இங்கே!

திருச்சுழி பிறந்து திகழொளி வீசி
இருள்கெட உலகில் எழுந்திடும் இரவி,
அருணை என்னும் அருட்சுடர் மலையில்
அருந்தவம் புரிந்த ஆன்ம விளக்கு

மேலும் படிக்க

0 Comments

விவேகானந்த வெண்பா

"சொல்லுரம் பெற்ற செல்வன், சோர்விலாத் தூய வீரன்" என்று அனுமனைக் குறித்துக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியது விவேகானந்தருக்கும் பொருந்தும். வீரம், விவேகம், பற்றற்றத் தூய்மை, தன்னலமற்ற அன்பு போன்ற நற்பண்புகளின் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் விவேகானந்தரைப் போற்றும் வெண்பாக்கள் இங்கே.

வீர விழிபார்க்க, விண்ணதிரும் சொல்முழங்கக்,
காரிருளைப் போக்கும் கதிரவன்போல் - பாரிருளை
வேரறுக்க வந்தான் விவேகா னந்தனெனும்
பாரதத்தாய் பெற்ற பரன்.

மேலும் படிக்க

0 Comments

வலம்புரி அகவல்

பாஞ்சசன்னியம் என்னும் வலம்புரி சங்கின் பெருமையைச் சொல்லும் அகவல் பாட்டு! நேரிசை ஆசிரியப்பாவில் எழுதப் பட்டது. வலம்புரி சங்கே வலம்புரி சங்கே! நலம்புரிந் தாழ்கடல் நடுவில் பிறந்தாய்!

0 Comments

பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில், மகாகவி பாரதியாரின் எழுத்தின் சிறப்பையும் நேர்கொண்ட சிந்தனையையும் போற்றி எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்த வெண்பாக்களைக் கொண்டு ஒரு மாலையாகத் தொடுத்து யாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர்…

0 Comments

பாவேந்தர் புகழ் வெண்பா

பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!

தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.

மேலும் படிக்க

2 Comments

புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

0 Comments

அருளுள்ளம் கொண்ட இறைவர் திருமகன் – இயேசுபிரான் புகழ் பாட்டு

விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்!
அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
அருகில் தோன்றிடும் நற்பர லோகமே!

0 Comments

End of content

No more pages to load