புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

0 Comments

அருளுள்ளம் கொண்ட இறைவர் திருமகன் – இயேசுபிரான் புகழ் பாட்டு

விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்!
அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
அருகில் தோன்றிடும் நற்பர லோகமே!

0 Comments

அருட்பா அளித்த அருளாளர் – வள்ளலார் புகழ் மாலை

வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்' என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க.

மேலும் படிக்க

0 Comments

பற்றற விழி! – ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லும் வாழ்க்கை நெறி

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. இவர் கவித்துவமான சொற்களால் தன் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இந்தக் கவிதையில் ஜேகே அறிவுறுத்திய தத்துவங்கள் சிலவற்றைக் காண்போம்.

"நீதான்(இப்) பேருலகம், உன்னைப் போலே
நினைவுகளும் உணர்வும்யா வர்க்கும் உண்டு,
பாதைகள்சென் றடையாப்பே ருண்மை தன்னைப்
பழமதங்கள் சாத்திரங்கள் காட்டுமோ சொல்?"

மேலும் படிக்க

0 Comments

சிலுவையில் ஜீவனை அளித்த திருமகன் – இயேசு பாமாலை

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார் செய்யும் தீச்செயலைப் பொறுத்தருளி, நீசரையும் நேசிக்கும் இயேசுபிரான் நற்புகழை இந்த விருத்தப் பாடல்கள் மூலம் பாட முயன்றுள்ளேன். பாரதியின் 'அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி' என்னும் பாட்டின் நடையில் அமைந்த கவிதைகள் இவை.

மேலும் படிக்க

0 Comments

ஓஷோ என்னும் ஞானச் சிகரம்

ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.

தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
  வாளென வீழ்த்திடும் மடமைதனை

மேலும் படிக்க

0 Comments

நலம் தரும் நூலகம்

காலங்கள் கடந்தநுண் கலைகள்காட்டும் நூலகம்
பாலமாகி பழமையோடு புதுமைசேர்க்கும் நூலகம்
வேலைவாய்க்கும் கல்விகற்க வெற்றிகாட்டும் நூலகம்
சாலையெங்கும் சபைகளெங்கும் தமிழ்முழக்கும் நூலகம்!

மேலும் படிக்க

0 Comments

நான் அறிந்த ஞானியர்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்க

0 Comments

End of content

No more pages to load