சின்னச் சின்னத் தேனீக்கள்
   சிரித்துப் பறக்கும் தேனீக்கள்
 மின்னும் அழகு மலர்தேடி
   மிகுந்த தேனைச் சேகரிக்கும்
 தின்ன உணவு பெற்றிங்குச்
   செழித்து வையம் வாழ்ந்திடவே
 பொன்மக ரந்தம் சேர்த்திடுமே
   பூமியில் பஞ்சம் தீர்த்திடுமே!

 ஊரைச் சுற்றும் சிறுதேனீ
   ஓயாது இயங்கும் சிறுதேனீ
 யாரும் அடையா உயரத்தில்
   இனிதாய்க் கூட்டை அமைத்திடுமே
 ஆரா அமுதக் களிநடனம்
   ஆடிப் பாடிப் பேசிடுமே
 பாரில் இதுபோல் அற்புதத்தைப்
   பார்த்தவர் யாரும் இங்குண்டோ?

Leave a Reply