கூற்றம் நடுங்கக் குரலெடுத்தான், யாரிடமும்
 போற்றிப் பணிந்தடிமை பூணாதான் -  ஏற்றமுற
 நாவுக் கரசன் நவின்றுரைக்கும் நன்மொழிதான்
 ஆவிக்(கு) அமுதென்(று) அறி.
 அலைகடலில் ஆழ்ந்தாலும் அஞ்சார், தலைமேல் 
 மலைவிழினும் தாம்பதற மாட்டார் - நிலைகலங்கா 
 நன்மனத்தர் செந்தழிழர் நாவுக் கரசர்புகழ்
 பொன்மலரால் போற்றும் புவி.
ஆங்கில மொழியாக்கம்

Leave a Reply