நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள்
Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge.
ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள்
- மனமே கேள்! விண்ணின் இடி முன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை.
- கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு!
- எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
- கடமை அறியோம் தொழில் அறியோம்; கட்டென்பதனை வெட்டென்போம்!
- சென்றது இனி மீளாது, சென்றதனைக் குறிக்காமல் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணி வாழ்வீர்!
- ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோ?
- என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ, ‘தன்னை வென்றால்’ அவை யாவும் பெறுவது சத்தியம் ஆகும்!
- அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்
- ஐந்து புலன்மிசை வெற்றி கொள்வோம்;
(அப்போது நம்) தாளிடை வீழ்ந்து வையகம் போற்றும்
தத்துவம் பேசும் பாரதியார் பொன்மொழிகள்
- பிரமம் ஒன்று! அது உன் உணர்வு!
- சுத்த அறிவே சிவம்
- நோக்கும் திசையெல்லாம் ‘நாம்’ அன்றி வேறில்லை
- உள்ளும் புறமும் உள்ளதெல்லாம் தானாகும் வெள்ளமே தெய்வம்!
- பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதன் இயல்பு ஒளி உறும் அறிவு!
- தோன்றி அழிவது வாழ்க்கை; அதில் இன்ப துன்பம் வெறுமை என்று எது வருமேனும் களி மூழ்கி இருத்தல் முக்தி!
- செய்யுறு காரியம் ‘தாம்’ அன்றி செய்பவர் சித்தர்கள் ஆவர்!
- காலமே மதியினுக்கு ஓர் கருவி
- சாத்திரங்கள் வேண்டா! சதுமறைகள் ஏதுமில்லை! தோத்திரங்கள் இல்லை! உள்ளம் தொட்டு நின்றால் போதுமடா!
அறம் அறிவுறுத்தும் பாரதியார் பொன்மொழிகள்
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
- பகைவனுக் கருள்வாய்! தின்ன வரும் புலி தன்னையும் அன்புடன் சிந்தையில் போற்றிடுவாய்!
- தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
- மானுடர் உழாவிடிலும், வானுலகம் நீர் தருமென்றால் நெற்கள் புற்கள் மலிந்திருக்குமல்லவா? உணவை இயற்கை கொடுக்கும்;உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!
- மாலும் சிவனும் வானோர் எவரும் ஒன்றே
- சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாரை ஒப்பவர்