பொய்ம்மைப் பாம்பை அடிக்கும் படைத்தலைவன் , காலனை வெல்லும் பாவலன், மனத்தில் உறுதி ஏற்றும் வண்கவி, இந்த பாருக்கு அதிபதி – எங்கள் மகாகவி பாரதி. அவன் பாட்டின் புகழைச் சொல்லும் என் வெண்பாக்கள் இங்கே.

ஆங்கொரு பாட்டில் அணிமிளிரும் மற்றொன்றில்
நீங்காத மோனம் நிறைந்திருக்கும் – தூங்கா 
விழிப்புமிகும் பாரதியின் வீரமிகு பாடல் 
அழித்துவிடும் அல்லல் தனை.

கவலை எனும்வலையில் காலமெலாம் வாடித்
துவன்றுத் துடிக்கின்ற நெஞ்சே – நவமாய்ச்
சுடர்தந் துயிர்வளரச் சொல்லாய்பா ரதியின்
இடர்வீழ்த்தும் இன்பக் கவி.

விடுதலை வேண்டாய் வெறும்வே தனையால்
கொடுநரக வாழ்வில் குலைவாய் – இடரகல
இன்றேனும் நன்னெஞ்சே பாரதியின் இன்கவியில்
ஒன்றேனும் ஓதாய் உணர்ந்து
.

Leave a Reply