பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வெண்பா

பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வெண்பா

பாவேந்தர் பாரதிதாசன்

தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.
தமிழென்னும் வாளெடுத்துச் சாதிவேர் சாய்த்துச்
சமயச் சடங்கெதிர்த்துச் சாடி - இமயச்
சிகரம்போல் நின்றொளிரும் செந்தமிழ்ப்பா வேந்தர்
புகழ்கொள் புரட்சிக் கவி.
தாளாத் துயர்கொடுக்கும் சாதிமதச் சண்டையிலே
நாளும் நலமிழக்கும் நானிலத்தீர் - கேளுங்கள்!
பாரொன்றப் பாட்டிசைத்தப் பாவேந்தர் சொல்மறந்தீர்,
யாரும்மைக் காப்பார் இனி?
 வந்திங்குச் சேர்ந்த வடமொழிகள் நின்றெதிர்த்துச்
 செந்தமிழைத் தாழ்த்தினால் சீறியெழு! - சிந்தை
 துணிந்துத் தமிழ்க்காக்கச் சூளுரைப்போம் என்றார்
 அணிந்தபுகழ்ப் பாவேந்தர் அன்று. 
 செழித்தவயல் தந்தத் திருச்செல்வம் நாளும்
 உழைத்தவர்க்கே இல்லையாம் ஓகோ! - கொழுத்தவரே
 கொட்டிக்கொண் டாண்டிடக் கூனிக் குறுகாமல்
 தட்டிக்கேள் என்றார் தடுத்து. 

This Post Has 2 Comments

 1. Anuradha

  Hi mama
  This venba is too good, it was a bit tough to understand, but really interesting

  1. இமயவரம்பன்

   Thank you! The meaning of the first Venba is as below:

   Raise your shoulders and reach for the sky!
   (meaning: Elevate your self and aspire to the best),
   Raise your sword and subdue the world!
   (meaning: Be fearless and liberate the world from the clutches of chaos and disorder),
   To create a new world that does not destroy itself,
   You must create a new doctrine ( that brings forth new order thereby destroying the old)
   – These are the words delivered as the drum-roll
   By Bharathidasan, who is the greatest among the poets who have mastered all the three forms of Tamil ( Literature, Music and Play)

Leave a Reply