பல்வேறு மதத்தினரிடையே இன்று மூண்டிருக்கும் மீளாத சண்டைகளை நினைக்கும் போது, வழிபாட்டு முறை மற்றும் சாத்திர வேறுபாடு என்ற சிறிய காரணத்திற்காக நிகழும் இந்த பெருஞ்சண்டைகள் தேவைதானா என்று எண்ணிப் பொருமத் தோன்றுகிறது. இந்த மதஞ்சார்ந்த மூடத்தனத்தை நினைத்து எழுந்த மனப்பொருமலால் தோன்றிய கவிதான் இது.

‘எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?’ என்று கேட்ட சிவவாக்கியரின் நிறைந்த ஞானத்திற்கு இந்தப் பாட்டை அர்ப்பணிக்கிறேன்.

"எங்களிறை பெரி(து)உங்கள் இறைதான் பொய்யே!
     இணையற்ற(து) எங்கள்மதக் கொள்கை தானே!
 செங்குருதிச் சிந்திடுவோம் மதத்துக் காகத்
     தீராத சண்டையிட்டு மடிவோம்", என்றே
 பொங்கிவரும் மடமையதன் பிடியில் சிக்கிப்
     போர்க்கொடியைத் தூக்காமல் சிந்தி யுங்கள்!
 இங்கெழுந்த மதப்பிணக்கால் மனிதம் தோற்க
     இருள்வளர்க்கும் இச்சிறுமை தேவை தானா?
ஆங்கில மொழியாக்கம்

Leave a Reply