தமிழ் – பெயர் காரணம்

தமிழ்மொழி தனது இனிமையான பெயரை எப்படிப் பெற்றது என்பதை அறிஞர்கள் பலர் பலவாறு ஆய்ந்து உரைக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்கள் ஒவ்வொன்றும் பெருமிதம், வியப்பு, களிப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. அத்தகைய சுவைமிகுந்த காரணங்களில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

நாவில் இனிக்கும் நளவெண்பா

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இந்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம் மேலும் படிக்க

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியர சாணை, பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய், குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே! – மகாகவி பாரதி விளக்கம் அறிவிலே தெளிவு இந்தக் காலகட்டத்தில் நாம் அறிந்துகொள்ள நம் செவியில் பாயும் செய்திகள் மற்றும் தகவல்கள் ஏராளம். எட்டுத் திசையிலிருந்தும் வருகின்ற இந்த அறிவுப் பெருக்கால் நமக்கு உண்டாகும் குழப்பங்கள் நம்…

என்னைப் பற்றி

சமயமெனச் சாதியெனச் சடங்கர்சொலும் பிரிவுகளைச்
சுமைகளென மனத்தகற்றிச் சுடர்ஞானம் தேடுபவன்,
இமயம்தொடும் நினைவலைகள் வரம்பில்லா(து) எழுச்சியுறத்
தமிழென்னும் அமிழ்தருந்திப் பிதற்றுகின்ற தமிழன்பன்!

புவிசிறக்கக் கவிபடைப்போர் பொன்போன்ற வார்த்தைகளைச்
செவிசிறக்கக் கேட்டறிவுத் தெளிந்துதமிழ்க் கவிபயின்றேன்!
நவிலரிய நன்னூல்கள் நமக்களித்த முன்னோர்கள்
சுவையுடைய சொல்கேட்டுத் துணிந்துதமிழ்ப் பாட்டிசைத்தேன்!