எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு - ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு

‘எதிர்மறைகளின் முரண்பாடு’ என்னும் இந்தப் பதிவில், நன்மை – தீமை, ‘இருக்கும் நிலை (Being) – இருக்க வேண்டிய நிலை (Becoming)’ முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும் என்றும் ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம்.

எதிர்மறைகளின் முரண்பாடு

தீமை என்று உண்மையில் ஒன்று உண்டா? தயவு செய்து உங்கள் கவனத்தை இங்கு செலுத்துங்கள், நாம் ஒன்று கூடி இதனை ஆராய்வோம். நன்மை தீமை என்று இரண்டு இருக்கிறது என்கிறோம். பொறாமை மற்றும் அன்பு இவை இரண்டும் உண்டு என்றும் பொறாமை என்பது தீயது, அன்பு என்பது நன்மை தரக்கூடியது என்றும் சொல்கிறோம். வாழ்க்கையை ஏன் இவ்வாறு நன்மை தீமை என்று பிரித்துப்பார்க்கிறோம்? இவ்வாறு பிரித்து நோக்குவதால் முற்றிலும் எதிர்மறையான இவற்றுள் ஒரு முரண்பாட்டை உருவாக்கும் அல்லவா? மனித மனத்தில் அன்பையும் பரிவையும் நீக்கும் பொறாமை, வெறுப்பு, கொடூரம் இவை யாவும் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் நாம் ஏன் நல்லது என்று ஒன்றையும் தீயது என்று மற்றொன்றையும் கொண்டு வாழ்க்கையைப் பிரித்துப் பார்க்கிறோம்? உண்மையில் ‘கவனம் இல்லாத மனம்’ என்ற ஒன்று மட்டும் தானே இருக்கிறது? ஏனென்றால், முழுமையான கவனம் உண்டாகும்போது, மனம் முற்றிலும் விழிப்படையும் போது, நன்மை என்றும் தீமை என்றும் ஒன்று இருக்காது. விழிப்படைந்த நிலை மட்டுமே இருக்கும். நன்மை என்பது ஒரு பண்போ நற்குணமோ கிடையாது. அது அன்பின் ஒரு நிலை. அன்பு இருக்கும் போது, நன்மை தீமை என்று இரண்டு இருக்காது, அன்பு மட்டுமே இருக்கும். நீங்கள் ஒருவரை நேசிக்கும் போது, நன்மை தீமைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள், ஏனென்றால் உங்கள் ஆன்மா முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கும். எப்போது உங்கள் முழுக்கவனமும் அன்பும் குறைவுற்று நின்று போகிறதோ அப்போது தான் ‘நான் எப்படி இருக்கிறேன்’ , ‘நான் எப்படி இருக்க வேண்டும்’ என்பனவற்றுள் முரண்பாடு ஏற்படும். அப்போது நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதனைத் தீமை என்றும், நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த நிலையை நன்மை என்றும் (தவறாக) நினைக்கத் தோன்றிவிடும்.

உங்கள் மனத்தை உற்றுக் கவனியுங்கள். அப்போது இதனை உணர்வீர்கள் : எந்தக் கனத்தில் உங்கள் மனம் ‘வேறொரு நிலைக்கு மாறவேண்டும்’ என்ற போக்கில் சிந்திப்பதை நிறுத்துகிறதோ அதே கனத்தில் செய்கை என்பதும் நின்று போய்விடுகிறது. இந்த செய்கையற்ற நிலை தேக்க நிலை அல்ல; இது முழுக்கவனத்தின் நிலை, நன்மையின் வெளிப்பாடு.

Conflict of the opposites

I wonder if there is such a thing as evil? Please give your attention, go with me, let us inquire together. We say there is good and evil. There is envy and love, and we say that envy is evil and love is good. Why do we divide life, calling this good and that bad, thereby creating the conflict of the opposites? Not that there is not envy, hate, brutality in the human mind and heart, an absence of compassion, love, but why do we divide life into the thing called good and the thing called evil? Is there not actually only one thing, which is a mind that is inattentive? Surely, when there is complete attention, that is, when the mind is totally aware, alert, watchful, there is no such thing as evil or good; there is only an awakened state. Goodness then is not a quality, not a virtue, it is a state of love. When there is love, there is neither good nor bad, there is only love. When you really love somebody, you are not thinking of good or bad, your whole being is filled with that love. It is only when there is the cessation of complete attention, of love, that there comes the conflict between what I am and what I should be. Then that which I am is evil, and that which I should be is the so called good.

…You watch your own mind and you will see that the moment the mind ceases to think in terms of becoming something, there is a cessation of action which is not stagnation; it is a state of total attention, which is goodness.

‘தினம் ஒரு ஜேகே உரை’ என்னும் இந்தப் பதிவுத் தொடரில் இடம்பெறும் எழுத்துக்கள், ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘The Book of Life: Daily Meditations with Krishnamurti‘ என்னும் புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.

Leave a Reply