வலம்புரி அகவல்

பாஞ்சசன்னியம் என்னும் வலம்புரி சங்கின் பெருமையைச் சொல்லும் அகவல் பாட்டு! நேரிசை ஆசிரியப்பாவில் எழுதப் பட்டது.

வலம்புரி சங்கே வலம்புரி சங்கே!
நலம்புரிந் தாழ்கடல் நடுவில் பிறந்தாய்!

போர்முகம் தன்னில் புகுந்தொலி முழக்கி
கார்முகக் கடவுளின் வாய்ச்சுவைக் கண்டாய்!

கோதை நின்புகழ் ஓதி வணங்க
கோவிந்தன் கையில் கோலமுடன் நின்றாய்!

விண்ணில் மாலொடும் வெளிப்பட்டு நிற்கையில்
பட்டர் பிரானுன்மேல் பல்லாண் டுரைத்தார்!

கம்ப மகாகவி உன்னைத் திருமகள்
கரத்துடன் ஒப்பிட்டு அருங்கவி சொன்னான்!

எழில்வடி வாகிய நின்னைத்
தொழுதெழ உலகினில் சூழ்ந்திடும் வளமே!

Leave a Reply