தைப்பொங்கல் திருநாள் – ஒரு பொங்கல் கவிதை

தைப்பொங்கல் திருநாளைப் போற்றி, சிந்துப் பாடலாக நான் அமைத்த கவிதை இது. பாரதி பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற மெட்டில் அமைந்த ‘நொண்டிச் சிந்து’ என்னும் பாவகையைச் சார்ந்தது இப்பாட்டு.

தைவரும் பொங்கல்நன்னாள் – இந்த
    தரணியில் வளம்பல தந்திடும் நாள்!

செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
    செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!
பொய்வளர் பழமையெல்லாம் – தீயில்
    புகையுறப் போக்கிடும் புதுமையின் நாள்!

வையகம் வாழ்வதற்கே – எங்கும்
      மணிக்கதிர் விளைப்பவர் உயர்ந்திடும் நாள்
!

பொங்கலோ பொங்கலென்றே – இன்பம்
       பொங்கிடக் குரலெடுத் திசை முழங்க,

மங்கல மணிகள்கொண்டே – வண்டி
        மாடுகள் அலங்கரித் தாடி வர,

சிங்கத்தின் திறலுடையார் – இளந்
        தீரர்வல் லேற்றினை வெற்றி கொள்ள,
எங்குமோர் இன்பவெள்ளம் – நெஞ்சில் 
       எழுந்திட வந்தது பொங்கல் அம்மா!

This Post Has 2 Comments

 1. Kalyanaraman

  Hi mama
  Prathu here
  Your kavithai is awesome…
  Will try singing it in the tune which you said…

  1. இமயவரம்பன்

   Thank you, Prathu!

Leave a Reply