பாவகை : நேரிசை வெண்பா – அந்தாதியாகத் தொடுக்கபட்ட கவிதைகள்
1.
எரிதெறிக்கும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்
இருதயத்தில் பொங்கும் இரக்கம் – உரமிகுந்த
வாக்கென் றிவையனைத்தும் வாய்த்தபுகழ்ப் பாரதியாம்
மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து.

2.
வாழ்த்திப் பணிந்திடுவோம் வாநெஞ்சே! பாரதியை,
வாழும் நெறிகாட்டும் வான்சுடரை, – தாழ்த்தும்
பிரிவகலப் பாடும் பெருங்கவியைச் சீர்க்கும்
புரிவுடனே போற்றிப் புகழ்ந்து.

3.
புகழ்வேண்டான், தன்கைப் பொருள்வேண்டான், அன்பின்
மிகையன்றி வேறேதும் வேண்டான், – மகிழ்கொண்ட
இன்முகத்தான், யார்க்கும் எளியான் எனப்பரவி
என்மனமே பாரதியை ஏத்து.

4.
ஏத்து(ம்)இறை ஒன்றென் றிருந்தால்நல் வாழ்வென்றான்
வேற்றுமைகள் தாம்பார்க்கின் வீழ்வென்றான் – பூத்தமலர்
வண்ணம் ஒளிர்கவிதை வையத்தார்க்(கு) ஈந்(து)உவந்தான்
எண்ணம் சிறந்திடுக என்று.

5.
என்றென்றும் என்றன் இதயத் திடம்கொண்டான்
நன்றும்தீ தென்றும் நவின்றுரைத்தான் – குன்றாய்ப்
பரந்துயர்ந்து மொய்ம்பூட்டும் பாரதிபோல் உண்டோ
வருந்துயரம் மாற்றும் மருந்து.

6.
மருந்துக்கும் மெய்ச்சொல் வழங்காதார் தாமும்
திருந்தும் படிகவிதை செய்தான் – அருந்தவச்சொல்
ஆற்றலும் அன்பும் அறிவும்சேர் பாரதியைப்
போற்றச் சிறக்கும் புவி.

7.
புவிநீர்தீ காற்றுவிண் பூதச் சிறப்பைச்
சுவையூறும் தெள்ளமுதாய்ச் சொன்னான் – நவமாம்
திசைமொழிநூற் சாரம் செழுந்தமிழிற் சேர்த்தான்
இசைபரவாய் நெஞ்சே இசைந்து.

8.
இசைந்(து)அவன்செய் பாட்டின் இசைகேட்கக் கண்கள்
கசிந்துருகும் உள்கனியும் காதும், – அசைந்தியங்கும்
மூச்சும்சீ ராகும், முகமலரும், என்வாயும்
பேச்சற்றுச் செம்மை பெறும்.

9.
பெறு(ம்)அப்பே றெல்லாம் பெரிதென்றே எண்ணான்
வறுமையிலும் நெஞ்சம் வருந்தான் – சிறுமையெனும்
அற்ற(ம்)நம் நெஞ்சத் தறுப்பான் அவன்கவியாம்
வெற்றிமிகு வாளை விசைத்து.

10.
விசைகொண்டே வான்விழினும் மெய்ந்நெறியில் மாறா(து)
அசைவற்று நின்றால் அலல்போம் – நிசமென்
றுரைபா ரதியின் ஒருசொல்லாம் பொய்யை
இரையாக்கித் தின்னும் எரி.

வாழ்த்துகள். அனைத்துப் பாக்களும் அருமை.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
அன்புள்ள ஐயா, தங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!