“ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்” என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு பேரின்ப ஊற்று சுரந்து களிப்பேற்றும் என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு எடுத்துக்காட்டாக பாரதியார் கவிதைகள் பலவற்றைக் காணலாம்.
பாரதியார் கவிதைகள் அர்த்தம் பொதிந்த அருஞ்சுவைப் பாடல்கள்; பாமரர் மனத்திலும் ஞானவொளி வீசச் செய்யும் செங்கதிர்கள்.
பாரதியார் கவிதைகள் என்னும் கவிச்சோலையில் மலர்ந்த மலர்கள் கணக்கற்றவை; அவை அனைத்தும் நறுமணம் வீசி நல்லின்பம் தருவனமாகும். நித்த நித்தம் புத்தம் புது எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் பாரதி இலக்கியம் என்னும் சோலையில் மனத்தைப் பறிகொடுத்து நின்றபோது என் சிந்தனையில் தோன்றிய சில ஆழ்ந்த கருத்துகளைக் கட்டுரை வடிவில் தொகுத்து அளித்துள்ளேன்.
பல்வேறு கவிஞர்கள் மற்றும் தத்துவ ஞானிகளின் கருத்துகளை மேற்கோள்களாக பதித்து அமைத்த ‘பாரதி பாட்டமுதம்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், வற்றாத வளமான இலக்கிய இன்பத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.
பாரதியார் கவிதைப் பொருள் விளக்கும் கட்டுரைகள் – Bharathiyar Kavithai Vilakkam
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை, மனத்தில் உறைந்திருக்கும் சிறுமை எனும் மரப்பொந்தில் இட்டேன். அந்தச் சிறு பொறியின் சக்தியால் மனத்தின் சிறுமைகள் மடிந்தது மட்டுமல்லாமல், அச்சம், மடமை, துன்பம்,பொய் முதலிய தீமைகள் அனைத்தையும் கொண்ட மனமென்னும் காடே ஒட்டுமொத்தமாக எரிந்தது; சிறுமைகள் சிதைந்தழிந்த நெஞ்சம் நற்குணங்கள் பொலிந்து தெளிவுற்றது. இந்த விந்தை நிகழ்வு உணர்த்தும் உண்மை யாதெனில், வாழ்வில் அல்லவை தேய்ந்து அறம் பெருக வைக்க, பலனளிக்காத ஆயிரம் செயல்கள் செய்வதைக் காட்டிலும், செம்மைப்பட்ட சக்தி வாய்ந்த […]
பிரம்மம் என்றால் என்ன
பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். பொருள் பிரம்மம் என்று கூறப்படும் பரம்பொருளானது – ஓங்கார வடிவாக ஞானியர்கள் தொழுதெழ, நல்வினை தீவினை ஆகிய இருவினைகளையும் கடந்து நின்று குணம் குற்றம் அற்ற உன்னத நிலையில் இருப்பது; பொய்ம்மை, அறியாமை, கடும்பகை போன்ற தீமைகளைத் தடுத்து ஆட்கொள்ளும் சக்தி வாய்ந்தது; நன்மைகள் நல்கி […]
நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ – பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
தெளிந்த அறிவே யோகத்துக்கு முதற்படி. குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும். இதுவே கர்ம யோகமாகும்.
தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை ‘உண்டு உறங்கி இடர் செய்து செத்து’ முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; ‘நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே’ என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.