பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar Quotes

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள்

Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge.

 1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
 2. பகைவனுக் கருள்வாய்! தின்ன வரும் புலி தன்னையும் அன்புடன் சிந்தையில் போற்றிடுவாய்!
 3. பிரமம் ஒன்று! அது உன் உணர்வு!
 4. சுத்த அறிவே சிவம்
 5. நோக்கும் திசையெல்லாம் ‘நாம்’ அன்றி வேறில்லை
 6. மனமே கேள்! விண்ணின் இடி முன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை.
 7. கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு!
 8. உள்ளும் புறமும் உள்ளதெல்லாம் தானாகும் வெள்ளமே தெய்வம்!
 9. எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
 10. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
 11. கடமை அறியோம் தொழில் அறியோம்; கட்டென்பதனை வெட்டென்போம்!
 12. சென்றது இனி மீளாது, சென்றதனைக் குறிக்காமல் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணி வாழ்வீர்!
 13. ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோ?
 14. பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதன் இயல்பு ஒளி உறும் அறிவு!
 15. தோன்றி அழிவது வாழ்க்கை; அதில் இன்ப துன்பம் வெறுமை என்று எது வருமேனும் களி மூழ்கி இருத்தல் முக்தி!
 16. செய்யுறு காரியம் ‘தாம்’ அன்றி செய்பவர் சித்தர்கள் ஆவர்!
 17. காலமே மதியினுக்கு ஓர் கருவி
 18. மானுடர் உழாவிடிலும், வானுலகம் நீர் தருமென்றால் நெற்கள் புற்கள் மலிந்திருக்குமல்லவா? உணவை இயற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!
 19. மாலும் சிவனும் வானோர் எவரும் ஒன்றே
 20. என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ, ‘தன்னை வென்றால்’ அவை யாவும் பெறுவது சத்தியம் ஆகும்!
 21. சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாரை ஒப்பவர்
 22. சாத்திரங்கள் வேண்டா! சதுமறைகள் ஏதுமில்லை! தோத்திரங்கள் இல்லை! உள்ளம் தொட்டு நின்றால் போதுமடா!
 23. அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்
 24. ஐந்து புலன்மிசை வெற்றி கொள்வோம்;
  (அப்போது நம்) தாளிடை வீழ்ந்து வையகம் போற்றும்

Leave a Reply