ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை

Vaaranam Aayiram Vilakkavurai - Now in Amazon Kindle 'வாரணம் ஆயிரம் - விளக்கவுரை’ - ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப்…

மேலும் படிக்கஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை
0 Comments

தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை 'உண்டு உறங்கி இடர் செய்து செத்து' முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; 'நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே' என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

மேலும் படிக்கதேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
0 Comments

கந்த சஷ்டி கவசம் – பதவுரை

"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூல், முருகக் கடவுளின் பக்தர்கள் பலராலும் தினமும் பாராயணம் செய்து போற்றப்படும் அழகிய நூலாகும். இந்நூலைப் பலகோடி அன்பர்கள் பக்தியோடு பாடித் துதித்து குமரக்கடவுளின் அருளால் தீய சக்திகளினால் உண்டாகும் துயரம் நீங்கி வாழ்வில் வளம் பெற்றுள்ளனர். இத்தகைய அருள்வாய்ந்த நூலுக்கு சொற்பொருள் விளக்கம் அளிக்க இந்தப் பதிவில் முயன்றுள்ளேன். அருள்கூர்ந்து இப்பதிவினைப் படித்து, குற்றம் குறைகளைப் பொறுத்து, தங்கள் பொன்னான கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 

மேலும் படிக்ககந்த சஷ்டி கவசம் – பதவுரை
0 Comments

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்

பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் சிலப்பதிகாரச் செய்யுள்களும் திருக்குறள் பாக்களும் படிப்பவர் நெஞ்சில் தமிழமுதை ஊற்றி இன்பக் கடலில் திளைக்கச் செய்பவை.

மேலும் படிக்கபொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்
0 Comments

கோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்

கோளறு பதிகம் விளக்கவுரை Kolaru Pathigam book in Tamil ‘கோளறு பதிகம் - விளக்கவுரை’ - திருஞானசம்பந்தர் அருளிய கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்
17 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

Vinayagar Agaval - விநாயகர் அகவல் விநாயகர் அகவல் குறிப்புஇயற்றியவர்ஒளவையார் பாவகைநேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) அடிகள்72 அடிகள் விநாயகர் அகவல் - பெயர் காரணம் 'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர்.…

மேலும் படிக்கவிநாயகர் அகவல் பாடல் விளக்கம்
11 Comments

தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

A Translation of Thayumanavar's songs 1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments
இடரினும் தளரினும் பாடல் விளக்கம்
இடரினும் தளரினும்

இடரினும் தளரினும் பாடல் விளக்கம்

இடரினும் தளரினும் - Idarinum Thalarinum பாடல் பொருள் விளக்கம் 'இடரினும் தளரினும்' - Idarinum Thalarinum - எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப்…

மேலும் படிக்கஇடரினும் தளரினும் பாடல் விளக்கம்
15 Comments