நால்வர் வெண்பா மாலை
Naalvar Venbaa Maalai - Now available in Amazon Kindle Store நால்வர் வெண்பா மாலை நால்வர் வெண்பா மாலை - சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய…
Naalvar Venbaa Maalai - Now available in Amazon Kindle Store நால்வர் வெண்பா மாலை நால்வர் வெண்பா மாலை - சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய…
பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.
இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!விரிந்திடும் மனங்களின் துணையுடனே வியனுல குதவிடும் புதுவருடம்!அறிவினில்…
விவேகானந்தர் எழுதிய கவிதைகள் Poems composed by Swami Vivekananda Vivekanandar Kavithaigal - A Translation சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகள் (Swami Vivekananda's poems) எழுச்சிமிக்கவை; இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது…
பொருளடக்கம் கடற்கரைப் பாட்டுமேகப் பாட்டுதேனீப் பாட்டுமயில் பாட்டுகப்பல் பாட்டுஇயற்கை நலம் காப்போம்மழைப் பாட்டு கடற்கரைப் பாட்டு களிப்பூட்டும் கடற்கரைகடற்கரை அழகினைப் பாடிடுவோம் - கடற் காற்று தரும்சுகம் நாடிடுவோம் படர்மணற் பரப்பினில் கால்பதித்தே - பிணி பறந்திட உடல்வளம் கூடிடுவோம். வானகம்…
பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை;
உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!
தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.
திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்' என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க.
போதியம் திருநிழல் புனிதன், மாரனை வெல்லும் வீரர், மாயையைத் விலக்கும் சோதி, பூரணம் அடைந்த தேவர் என்று போற்றப்படும் சாக்கிய முனியாம் கௌதம புத்தரின் போதனைகள் மற்றும் ஆன்ம சாதனைகள் பற்றிப் புகழ்ந்திசை பாடும் கவிதைகள் இங்கே!
சித்தர்கள்
தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்
அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி 'ஆனந்தக் களிப்பு மெட்டில்' பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.