நால்வர் வெண்பா மாலை
Naalvar Venbaa Maalai - Now available in Amazon Kindle Store நால்வர் வெண்பா மாலை நால்வர் வெண்பா மாலை - சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய…

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.
பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை;
உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!
தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.