சித்தர்கள் புகழ் பாடுவோம்
சித்தர்கள்
தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்
அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி 'ஆனந்தக் களிப்பு மெட்டில்' பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.