‘இடரினும் தளரினும்’ – Idarinum Thalarinum – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும்.
இடர்களைக் களைந்து நலம் சேர்க்கும் இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பெற்று தேவாரத்தின் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணியீசரின் திருவருளை வேண்டிப் பாடப்பட்டது.
இடரினும் தளரினும் (Idarinum thalarinum) – சிறு குறிப்பு | |
---|---|
பாடியவர் | திருஞானசம்பந்தர் |
திருமுறை | மூன்றாம் திருமுறை |
பண் | காந்தாரபஞ்சமம் |
தலம் | ஆவடுதுறை |
இடரினும் தளரினும் – பதிக வரலாறு
திருத்தென்குரங்காடுதுறை முதலிய தலங்களை வணங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாவடுதுறையை அடைந்து வழிபட்டு வரும் காலத்தில் அவரது தந்தையாராகிய சிவபாத இருதயர் அவர்முன் வந்து, தாம் யாகம் செய்வதற்கு காலம் வந்தமையால் அதனைச் செய்வதற்கு வேண்டிய பொன்னை விரும்பி விண்ணப்பித்தார்.
அதனைக் கேட்ட சம்பந்தர், தந்தைக்குக் கொடுப்பதற்குத் தம்மிடம் பொருள் ஒன்றும் இல்லாததை நினைந்து வருந்தி, ‘அந்தமிலாப் பொருள் எனப்படுவது ஆவடுதுறையுள் எந்தையார் இணையடித்தலங்கள் அன்றோ?’ என எழுந்து திருக்கோயிலை அடைந்தார். இறைவனைப் போற்றி ‘என்னை அடைந்து கேட்பவர்களுக்குக் கொடுக்கும் செல்வம் ஒன்றும் எனக்கு இல்லை; உன் திருவடியாகிய செல்வம் தவிர வேறொன்றும் நான் அறியேன்; உலக நன்மைக்காக இயற்ற இருக்கும் யாகத்தை நடத்திடப் பொன் பொருள் அருள மாட்டாயோ?’ என்று வினவித் திருவருளை வேண்டுகின்ற ‘இடரினும் தளரினும்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.
அவ்வாறு தமது தந்தையாருக்காகப் பொருளை வேண்டி இன்றமிழ் பாடிய சம்பந்தரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க இறைவன் திருவுள்ளம் கொண்டான். மாசிலாமணியீசரின் இன்னருளால் சிவபூதம் ஒன்று அங்கே தோன்றி பலி பீடத்தின்மேல் பசும்பொன் நிறைந்த உலவாக்கிழி (குறையாத பணமுடிப்பு) ஒன்றை வைத்தது; பின் சம்பந்தரை நோக்கி ‘இவ்வுலவாக்கிழி உமக்கு இறைவன் நல்கியது’ என்று உரைத்தது. இந்த அற்புதத்தால் மனம் மகிழ்ந்த சம்பந்தர் அந்த சிவப்பூதத்தின் முன் பணிந்தெழுந்தார். பணிந்தெழுந்த அவர் அக்கிழியைத் தமது தலைமீது தரித்து எடுத்துக்கொண்டு வந்து தமது தந்தையிடம் சென்று அவர் கையில் கொடுத்து ‘வேத முதல்வனாகிய சிவபெருமானைத் துதித்துத் தாங்கள் செய்யும் வேள்விக்கும் மற்றும் சீர்காழியில் உள்ள நல்லோர் பிறர் செய்யும் திருத்தொண்டுகளுக்கும் இந்தப் பொன் முடிப்பு உதவும்; எவ்வளவு எடுத்தாலும் உலவாமல் (குறையாமல்) நிறைந்தே இருக்கும் இந்தப் பொற்கிழி’ என்று மொழிந்தருளினார்.
Idarinum thalarinum:
Idarinum Thalarinum is a Hymn composed by Thirugnana Sambandar at the Thiruvavadthurai Siva Temple. The story goes that Sambandar’s father needed money to perform a Yajna. Sambandar, wanting to help his father perform the Yajna, prayed to God to provide the means to prepare the offerings. His prayer took the form of a heartrending song that consists of 11 hymns. On hearing this musical song, the Lord bestowed him a bag of gold through a Siva Gana. Sambandar offered this bag of gold to his father who used this money to complete his Yajnas and other sacrificial offerings.
இடரினும் தளரினும் பாடல் விளக்கம்
1. இடரினும் தளரினும்
இடரினும் தளரினும் பாடல் வரிகள் – Idarinum Thalarinum Lyrics in Tamil
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
இடரினும் தளரினும் பாடல் பொருள்
தளரினும் = வயது முதிர்வினால் உடல் தளர்ந்தாலும்
எனது உறுநோய் தொடரினும் = முன்வினைப்பயனால் கொடுநோய்கள் என்னைவிட்டு நீங்காமல் தொடர்ந்து வந்து வாட்டினாலும்
உனகழல் = உனது + கழல் = உன் திருவடிகளை
தொழுதெழுவேன் = தொழுது வணங்குவேன்
கடல்தனில் = திருப்பாற்கடலில்
அமுதொடு = அன்று கடைந்தெடுத்த அமுதத்துடன்
கலந்த நஞ்சை = சேர்ந்து தோன்றிய ஆலகால விஷத்தை
மிடறினில் = கழுத்தினில்
அடக்கிய = அடக்கித் (தேவர்களைக் காத்த)
வேதியனே = வேத நாயகனே!
இதுவோ எமை ஆளுமாறு? = இதுதான் உன் அடியேனை நீ ஆட்கொள்ளும் முறையா?
ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் = தந்தையின் வேள்வி நடத்தத் தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்கு அளிக்கவில்லையென்றால்
அதுவோ உனது இன்னருள்? = அதுதான் உன் திருவருள் காட்டும் விதமா?
Idarinum Thalarinum – In English
Let Fate follow, Thy Grace I seek;
O Lord of Vedas! To Nectar free,
Thy throat held the poison born from sea.
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
2. வாழினுஞ் சாவினும்
பாடல் வரிகள்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
சாவினும் = வாழ்க்கை முடிவுற்று இறக்கும் காலத்திலும்
வருந்தினும் = மனம் வருந்தித் துன்பத்தில் உழலும் காலத்திலும்
போய் வீழினும் = நல்வழியிலிருந்து மாறித் திசைதடுமாறி விழுகின்ற போதிலும்
உனகழல் = உன் திருவடிகளை
விடுவேன் அல்லேன் = இறுகப் பற்றிக்கொண்டுச் சரணடைவதை விடமாட்டேன்
தாழ் இளம் தடம் புனல் = பரவி ஓடும் நீரை உடைய கங்கையைக் கொண்ட
தயங்கு = ஒளிவீசும்
சென்னி = செஞ்சடையில்
போழ் = பிளவுபட்ட (பிளவுபட்டாற்போல் தோன்றும்)
இளமதி வைத்த = பிறைச்சந்திரனை அணிந்த
புண்ணியனே = நன்மை அருள்பவனே!
Vaazhinum Saavinum – In English
While stumbling in life, You are my Refuge;
O Lord, who wears the crescent on the crown
From where the waters of Ganga flow down!
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
3. நனவினும் கனவினும்
பாடல் வரிகள்
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
கனவிலும் = மனம் துயில் கொள்ளும் கனவு நிலையிலும்
நம்பா உன்னை = அடியவர்களின் விருப்பத்திற்குரியவனும் அனைவருக்கும் நம்பத் தகுந்தவனுமான உன்னை
மனவினும் = மனம் ஒன்றி
வழிபடல் மறவேன் = வணங்குவதற்கு ஒருபோதும் மறக்கமாட்டேன்
புனல் = கங்கையையும்
விரி நறும் கொன்றைப் போது = விரிந்து பரவிய நறுமணமுடைய கொன்றை மலரையும்
அணிந்த = தன் செஞ்சடையில் சூடிக்கொண்டு
கனல் எரி = பற்றி எரிகின்ற
அனல் புல்கு = நெருப்பை ஏந்திடும்
கையவனே = திருக்கரத்தை உடையவனே!
Nanavinum Kanavinum – In English
I never forget to worship Thee;
Wearing waters and flower with fragrance nice,
You hold the fire with flames that rise.
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
4. தும்மலோடு அருந்துயர்
பாடல் வரிகள்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
அருந்துயர்= அந்நோயுடன் கூடிய துயரமும்
தோன்றிடினும் = விளைந்து என்னை வருத்தினாலும்
அம்மலர் = மலர் போன்ற
அடியலால் = அடி + அல்லால் = உன் திருவடிகளின் பெருமையைப் போற்றாமல்
என் நா = எனது நாக்கு
அரற்றாது = வேறெதுவும் பேசாது. (உன் பெருமையை மட்டுமே பேசும்)
கைம்மல்கு = கையில் தரித்த
வரி சிலை = தீ உமிழும் வில்லிலிருந்து
கணை ஒன்றினால் = சீறிப் பாய்ந்த அம்பு ஒன்றின் சக்தியால்
மும்மதிள் = மதிள் சூழ்ந்த அரண் அமைந்த மூன்று புரங்களையும்
எரி எழ = நெருப்பால் எரிந்து அழியும்படி
முனிந்தவனே = சினத்தைக் காட்டியவனே!
Thummaloodu Arunthuyar – In English
Thy Lotus feet I praise and hold;
With an arrow shot from a hand-held bow
Thou destroyed strong forts three in a row!
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
5. கையது வீழினும்
பாடல் வரிகள்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
கழிவுறினும் = துச்சமாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட போதும்
செய்கழல் அடியலால் = உன் சேவடிகளை அன்றி
சிந்தை செய்யேன் = வேறொன்றையும் நெஞ்சில் வைத்துத் துதிக்க மாட்டேன்
கொய்யணி = கொய்யப்பட்ட அழகிய
நறுமலர் = வாசனை மிகுந்த (கொன்றை) மலர்களை
குலாய சென்னி = சூடிய திருமுடியும்
மையணி = (நஞ்சை உண்டதால்) கருமையான
மிடறுடை = மிடறு + உடை = கழுத்தினை உடைய
மறையவனே = வேதப்பொருளாக விளங்குபவனே!
Kaiyathu Veezhiyin – In English
And feel disdained, Your feet I venerate!
From your crown the flowers’ sweet-smells rise,
O Dark-Necked Lord whom the Scriptures praise!
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
6. வெந்துயர் தோன்றியோர்
பாடல் வரிகள்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
ஓர் வெருவுறினும் = அச்சத்தை விளைவித்தாலும்
எந்தாய் = என் தந்தையே!
உன் அடியால் = உன் திருவடியை அல்லாமல்
என் நா = எனது நாக்கு
ஏத்தாது = வேறொன்றையும் போற்றிப் புகழாது
ஐந்தலை = ஐந்து தலைகளைக் கொண்ட
அரவு கொண்டு = பாம்பினை
அரைக்கு = இடுப்புக்கு
அசைத்து = கச்சாக தரித்துக் கொண்டு
சந்த வெண் பொடி = மணம் வீசும் திருவெண்ணீற்றை
அணி = திருமேனியில் அணிந்த
சங்கரனே = நலந்தரும் இறைவனே. (சங்கரன் என்றால் ‘நலம் தருபவன்’ என்று பொருள்).
Venthuyar Thonri – In English
My Father! Praising Thy feet I sing,
Thy waist girdled with snake of five heads,
O Lord you wear Ash with fragrance that spreads!
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
7. வெப்பொடு விரவியோர்
பாடல் வரிகள்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
விரவி = தொடர்ந்து வந்து வாட்டி
ஓர் வினை வரினும் = தீவினை என்னைத் தாக்க வந்தாலும்
அப்பா = தந்தையே!
உன் அடியலால் = உன் திருவடியை அல்லாமல்
என் நா = எனது நாக்கு
அரற்றாது = வேறொன்றையும் போற்றிப் புகழாது
ஒப்புடை ஒருவனை = அழகில் ஒப்பற்ற மன்மதனை
உரு அழிய = அவன் உருவம் அழிந்து சாம்பலாகுமாறு
அப்படி அழல் எழ = நெருப்புத் தோன்ற
விழித்தவனே = நெற்றிக் கண் திறந்தவனே!
Veppodu Viravi – In English
My Father! I seek only Thy feet’s grace,
To destroy the lovely Cupid’s form,
Thou opened your eye like a fiery storm!
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
8. பேரிடர் பெருகியோர்
பாடல் வரிகள்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
ஓர் பிணி வந்தாலும் = கொடுநோய்கள் வந்தாலும்
சீர் உடை = பெருமை மிக்க
கழல் அல்லால் = உன் திருவடியை அல்லாமல்
சிந்தை செய்யேன் = வேறொன்றையும் மனத்தில் நினைக்க மாட்டேன்
ஏருடை = அழகிய
மணிமுடி இராவணனை = மணிமகுடம் அணிந்த இலங்கை வேந்தனை
ஆர் இடர் பட = மிகுந்த துன்பம் உறுமாறு
வரை = கயிலை மலையின்கீழ்
அடர்த்தவனே = அழுத்திப் பணியவைத்தவனே!
9. உண்ணினும் பசிப்பினும்
பாடல் வரிகள்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
பசிப்பினும் = பசியால் களைத்து இருக்கும்போதும்
உறங்கினும் = துயில் உறங்கும் போதும்
நின் ஒண்மலர் அடி அல்லால் = உன் ஒளி நிறைந்த திருவடியை அல்லாமல்
உரையாது என் நா = வேறொன்றையும் துதிக்காது என் நாக்கு
கண்ணனும் = திருமாலும்
கடிகமழ் = மணம் வீசும்
தாமரைமேல் அண்ணலும் = தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரமனும் கூட
அளப்பு அரிதாயவனே = அளந்து அறிய முடியாத பெருமை மிக்கவனே!
10. பித்தொடு மயங்கியோர்
பாடல் வரிகள்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
பாடல் பொருள்
மயங்கி = மயக்கத்தைத் உண்டாக்கும்
பிணி வரினும் = கொடுநோய்கள் வந்து என்னைச் சூழ்ந்தாலும்
அத்தா = தந்தையே!
உன் அடி அல்லால் = உன் திருவடியை அல்லாமல்
அரற்றாது என் நா = வேறொன்றையும் போற்றிப் பாடாது என் நாக்கு
புத்தரும் சமணரும் = பெளத்தர்களும் சமண மதத்தாரும்
புறன் உரைக்க = புறம் கூறினாலும்
பத்தர்கட்கு = உன்னை வணங்கும் பக்தர்களுக்கு
அருள் செய்து = அருள் புரிந்து
பயின்றவனே = நலம் கொடுப்பவனே!
11. அலைபுனல் ஆவடு (Idarinum Thalarinum – Thirukkadaikaappu)
திருக்கடைக்காப்புப் பாடல் வரிகள்
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
பாடல் பொருள்
ஆவடு துறை = திருவாவடுதுறையில்
அமர்ந்த = வீற்றிருந்து அருள்புரியும்
இலைநுனை = இலை போன்ற நுனி அமைந்த
வேல் படை = திரிசூலத்தை ஏந்திய
எம் இறையை = எமது இறைவனான சிவபெருமானை
நலம் மிகு ஞான சம்பந்தன் = அருள் நலம் மிகுந்த ஞான சம்பந்தனாகிய நான்
சொன்ன = உலகத்தார் நலனுக்காக அருளிச் செய்த
விலையுடை = சிறப்பு மிக்க
அருந்தமிழ் மாலை = பாமாலையாகிய இந்தத் தமிழ்ப் பதிகத்தை
வல்லார் = ஓதும் பக்தர்கள்
வினை ஆயின = முன்வினைகள் தரும் துன்பங்கள் யாவும்
நீங்கிப் போய் = விலகப் பெற்று
விண்ணவர் வியனுலகம் = தேவர்கள் வாழும் பரந்து விளங்கும் சுவர்க்கலோகத்தில்
நிலையாக = எப்போது வசிக்கும்படியாக
முன் ஏறுவர் = வீற்றிருப்பார்கள்.
நிலமிசை = இந்த மண்ணுலகில்
நிலையிலரே = மீண்டும் வந்து பிறக்க மாட்டார்கள்.
“கோளறு பதிகம் – விளக்கவுரை” புத்தகம்
‘கோளறு பதிகம் – விளக்கவுரை’ என்னும் பதிவு மேலும் பயனுள்ள கருத்துகளுடன் இப்போது புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலை வாங்கிப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் சில சுவையான கருத்துகளைக் கீழே உள்ள குறுந்தலைப்புகளில் காணலாம் :
- திருநாவுகரசருக்கும் சம்பந்தருக்கும் இடையே எழுந்த உரையாடலும் கோளறு பதிகம் பிறந்த கதையும்
- இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற மலர் எது?
- சங்கரன் என்ற திருநாமத்திற்கும் கோளறு பதிகத்துக்கும் உள்ள சம்பந்தம்
- நவக்கிரகங்களின் சரித்திரங்கள்
- திருநீற்றின் பெருமை
- ‘முருகு’ என்னும் சொல்லின் மகிமை
- சிவபெருமானின் எட்டு வீரத் திருச்செயல்களும் அவற்றைக் கோளறு பதிகப் பாடல்கள் போற்றுகின்ற சிறப்பும்
- சம்பந்தரை முருகக் கடவுளின் அவதாரமாகப் பார்த்த அருணகிரியார்
- ஞானப்பால் உண்ட குழந்தையும் திருஞானசம்பந்தர் என்னும் பெயர் அமைந்த கதையும்
- ‘அழகு’ என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 29 பெயர்கள்
- மறைஞான ஞான முனிவர் என்று சம்பந்தர் போற்றப்படக் காரணம்
- ‘ஆணை’ என்னும் சொல்லின் சிறப்பு
🌿⚘️🙏🙏🙏⚘️🌿
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Pl post for others also like மறையுடையாய்…..
நிலையிலரே = மீண்டும் வந்து பிறக்க மாட்டார்கள்.
பாடலின் கருத்துணர்ந்து நிலையில்லாதவர் என்று அர்த்தம் சொல்லாமல் மிகப் பொருத்தமான சொற்களால் சம்பந்தர் உருகிப் பாடும் பொருள் வரும்படி செய்திருக்கிறீர்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பும் மாத்திரை எனப்படும் “மீட்டர்” பிறழாமல் சொற்களை இயல்பாக ஆளும் சிறப்பு விழுமிய மொழிபெயர்ப்பு.
உங்களுக்கென ஒரு தனித்துவமான தமிழ்ப்பணி சைவநூல்களை ஆங்கில வடிவாங்கிப் படைக்கும் அருட்பணி.
“இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே”
Is there nothing you could provide
To a devotee who sings Thy Praise?
Is this the way You rule our lives?
Is this the way You show Your Grace?
these lines just takes you near Him the same way Sambandhar was surrendering to Him.
You got what it takes. Stop not. March ahead. All the best.
அடியார்க்கும் அடியேன் ச. ஏகாம்பரம்.
Thank you very much for your appreciation of my writings!
Very happy to know your esteemed thoughts on my translations in English!
Thank you again for your kind words and support!
Thank u for every word explanation.i am very impressed
VERY AWESOME EXPLANATION, THANK YOU ON BEHALF OF SAIVA PEOPLES
Thank you very much for your kind words!
இணையில்லா பணி⚘️🙏🙏🙏⚘️
ஓம் நமசிவாய ⚘️🙏🙏🙏⚘️
மிக்க நன்றி!
ஓம் நமசிவாய ⚘️🙏🙏🙏⚘️மிக்க நன்றி!
Arumai!!
Thanks a ton!!
அருமையான விளக்க உரை… இடனினும் தளரினும் & வேயுறு தோளி பங்கன்..⚘️🙏🙏🙏⚘️
மென் மேலும் பல உரைகள் தரவும்🙏
‘தானுறு’ மற்றும் ‘எனதுறுநோய்’ எனும் சொற்களில், ‘உறு’ எனும் சொல்லின் விளக்கம் தயவு செய்து தருக.
தானுறு = தான் + உறு; அதாவது ‘தான் உறுகின்ற’ என்று பொருள். ‘உறுதல்’ என்னும் வினைச்சொல்(verb), அது பயன்படுத்தப்படும் இடத்திற்குத் தகுந்தாற்போலத் தனிப்பட்ட பொருள் தரும். ‘தானுறு கோளும் நாளும்’ என்று சொல்லும் போது, ‘தானே வந்து நம்மை அடைகின்ற அல்லது சேர்கின்ற’ என்று பொருள் கொள்ளலாம்.
ஆனால், ‘எனதுறுநோய்’ என்று சொல்லும்போது வருகின்ற ‘உறு’ என்னும் சொல் ஓர் உரிச்சொல்(adjective) ஆகும். இது ‘மிகுதி’ என்னும் பொருளில் இங்கு வந்துள்ளது. அதாவது, ‘எனது உறு நோய்’ என்று சொல்லும்போது, ‘உறு நோய்’ என்பது மிகுதியான நோய் அல்லது மிகக்கொடிய நோய் என்று பொருள் தருகிறது. ‘நோய்’ என்னும் சொல்லும் இங்குப் பொதுவாக எல்லாத் துன்பங்களையும் குறிக்கும். ‘நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்’ என்னும் திருக்குறளையும் இங்குக் கருதிப்பார்க்கலாம்.
‘செய்கழல்’ என்னும் சொல்லில் இருக்கும் ‘செய்’ என்பது ‘செம்மை’ என்னும் பொருளில் வருகிறது.’கழல்’ என்றால் ‘வீரச் சிலம்பு’ என்று பொருள். இது அச்சிலம்புகளை அணிந்த திருவடிகளைக் குறிக்கும் ஆகுபெயர் ஆகும். அதாவது, செய்கழல் என்றால் செம்மை வாய்ந்த அல்லது சிவந்த திருவடி என்று பொருள்படும்.
ஓம் நமசிவாய ⚘️🙏🙏🙏⚘️
சிவ சிவ 🌺🙏🙏🙏🌺