முருகா என்னும் திருநாமம் – ஒரு சிந்துக் கவிதை

முருகன் பாட்டு

முருகன் பாட்டு

முருகா என்னும் திருநாமம் – ஒரு சிந்துக் கவிதை

1.
முருகா வென்னும் திருநாமம் – அதை
 மொழிவார் வெல்வார் வினையாவும்
உருகும் நெஞ்சுக் குரமாகும் – தொழு(து)
 உரைப்பார்க் கென்றும் உயர்வாகும். (முருகா என்னும்)
2.
பொருளே தேடிப் பொழுதொழிக்கும் – ஒரு
 பொருளில் வாழ்வின் இருள்கெடுக்கும்
அருளைப் பொழியும் ஒருநாமம் – திகழ்
 அடல்வே லொருவன் திருநாமம்!    (முருகா என்னும்)
3.
செயமே விரும்பி அறம்திறம்பிப் – புகழ்ச்
சிறைப்பட் டழுந்தி உழல்வதுபோய்
மயிலும் வேலும் துணையென்றே – நிதம்
வணங்கிப் பணிவார்க் கருள்நாமம். (முருகா என்னும்)
4.
துயரே வரினும் பிணியுறினும் – மிகு
  சுகமே பெறினும் நலமுறினும்
அயில்வே லரசின் அரும்புகழைத் – தம்
  அகத்தே துதிப்பார் மொழிநாமம். (முருகா என்னும்)

Leave a Reply