தமிழன்னை புகழ் மாலை
திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார். புவி அசைக்க வல்ல அவரது தத்துவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
கலீல் ஜிப்ரான் - லெபனான் தந்த கலைச்செல்வம்;
பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்;
எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்;
இணையற்ற ஆன்மீக மேதை.
ஜிப்ரான் படைத்த 'தீர்க்கதரிசி'(The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து அன்பின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கவிதையை அருந்தமிழில் மொழியாக்கம் செய்து கவிதையாகச் சொல்ல இங்கு முயன்றுள்ளேன்.
ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.
தேனென இனித்திடும் இவர்பேச்சு
தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
வாளென வீழ்த்திடும் மடமைதனை
வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.
ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்
தைப்பொங்கல் திருநாளைப் போற்றி, சிந்துப் பாடலாக நான் அமைத்த கவிதை இது.
தைவரும் பொங்கல்நன்னாள் - இந்தத்
தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!