விவேகானந்த வெண்பா

"சொல்லுரம் பெற்ற செல்வன், சோர்விலாத் தூய வீரன்" என்று அனுமனைக் குறித்துக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியது விவேகானந்தருக்கும் பொருந்தும். வீரம், விவேகம், பற்றற்றத் தூய்மை, தன்னலமற்ற அன்பு போன்ற நற்பண்புகளின் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் விவேகானந்தரைப் போற்றும் வெண்பாக்கள் இங்கே.

வீர விழிபார்க்க, விண்ணதிரும் சொல்முழங்கக்,
காரிருளைப் போக்கும் கதிரவன்போல் - பாரிருளை
வேரறுக்க வந்தான் விவேகா னந்தனெனும்
பாரதத்தாய் பெற்ற பரன்.

மேலும் படிக்க

0 Comments

பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில், மகாகவி பாரதியாரின் எழுத்தின் சிறப்பையும் நேர்கொண்ட சிந்தனையையும் போற்றி எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்த வெண்பாக்களைக் கொண்டு ஒரு மாலையாகத் தொடுத்து யாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர்…

0 Comments

பாவேந்தர் புகழ் வெண்பா

பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!

தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.

மேலும் படிக்க

2 Comments

உள்ளம் கவரும் கள்வர் – ஞான சம்பந்தர்

செந்தமிழுக்குச் சந்தம் சேர்த்த பாவலர்களில் முதன்மையானவர் திருஞான சம்பந்தர். யாழினிக்கப் பாடும் இசைப்புலவரான சம்பந்தப் பெருமானைப் போற்றிப் பாடும் இவ்வெண்பாக்கள்.

மேலும் படிக்க

0 Comments

பன்னிரு ஆழ்வார்கள் வெண்பா மாலை

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அத்தகைய சிறப்புடைய ஆழ்வார்களைப் போற்றி நான் எழுதிய வெண்பாக்கள் இவை.

சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்த தனிப்பெரியோர் தம்பெருமை – சிந்தையுறச்
சொல்லத் துணிந்துத் தொடுக்கின்றேன் சொல்மாலை
வெல்லும்சீர் வெண்பா விரித்து.

மேலும் படிக்க

0 Comments

பாரதி வெண்பா

பொய்ம்மைப் பாம்பை அடிக்கும் படைத்தலைவன் , காலனை வெல்லும் பாவலன், மனத்தில் உறுதி ஏற்றும் வண்கவி, இந்த பாருக்கு அதிபதி - எங்கள் மகாகவி பாரதி. அவன் பாட்டின் புகழைச் சொல்லும் என் வெண்பாக்கள் இங்கே.

ஆங்கொரு பாட்டில் அணிமிளிரும் மற்றொன்றில்
நீங்காத மோனம் நிறைந்திருக்கும் – தூங்கா
விழிப்புமிகும் பாரதியின் வீரமிகு பாடல்
அழித்துவிடும் அல்லல் தனை.

மேலும் படிக்க

0 Comments

End of content

No more pages to load