பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வெண்பா
பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றலை வீசும் செழுங்கவிதை;
உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு - இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!
தோளை உயர்த்தித் தொடடா,அவ் வானத்தை
வாளை உயர்த்தி,இவ் வையங்கொள்! - மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.
2 Comments
May 31, 2021