தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை 'உண்டு உறங்கி இடர் செய்து செத்து' முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; 'நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே' என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.