பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.

மேலும் படிக்கபாரதி வெண்பா மாலை
2 Comments

தமிழன்னை புகழ் மாலை

திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

மேலும் படிக்கதமிழன்னை புகழ் மாலை
0 Comments
வள்ளலார் புகழ் மாலை
வள்ளலார்

வள்ளலார் புகழ் மாலை

வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்' என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க.

மேலும் படிக்கவள்ளலார் புகழ் மாலை
0 Comments

சித்தர்கள் புகழ் பாடுவோம்

சித்தர்கள்

தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்

அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி 'ஆனந்தக் களிப்பு மெட்டில்' பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.

மேலும் படிக்கசித்தர்கள் புகழ் பாடுவோம்
0 Comments
ஓஷோ கவிதைகள்
ஓஷோ

ஓஷோ கவிதைகள்

ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.

தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
  வாளென வீழ்த்திடும் மடமைதனை

மேலும் படிக்கஓஷோ கவிதைகள்
0 Comments