கந்த சஷ்டி கவசம் – பதவுரை

"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூல், முருகக் கடவுளின் பக்தர்கள் பலராலும் தினமும் பாராயணம் செய்து போற்றப்படும் அழகிய நூலாகும். இந்நூலைப் பலகோடி அன்பர்கள் பக்தியோடு பாடித் துதித்து குமரக்கடவுளின் அருளால் தீய சக்திகளினால் உண்டாகும் துயரம் நீங்கி வாழ்வில் வளம் பெற்றுள்ளனர். இத்தகைய அருள்வாய்ந்த நூலுக்கு சொற்பொருள் விளக்கம் அளிக்க இந்தப் பதிவில் முயன்றுள்ளேன். அருள்கூர்ந்து இப்பதிவினைப் படித்து, குற்றம் குறைகளைப் பொறுத்து, தங்கள் பொன்னான கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 

மேலும் படிக்ககந்த சஷ்டி கவசம் – பதவுரை
0 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்

பாரதியார் கவிதை விளக்கம் Bharathiyar kavithaigal in Tamil with explanation "ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு…

மேலும் படிக்கபாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
0 Comments
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

Vinayagar Agaval - விநாயகர் அகவல் விநாயகர் அகவல் குறிப்புஇயற்றியவர்ஒளவையார் பாவகைநேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) அடிகள்72 அடிகள் விநாயகர் அகவல் - பெயர் காரணம் 'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர்.…

மேலும் படிக்கவிநாயகர் அகவல் பாடல் விளக்கம்
11 Comments
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் விளக்கம்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Agni Kunjondru Kanden Bharathiyar Kavithai அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல்    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்      - மகாகவி பாரதியார் எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை,…

மேலும் படிக்கஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
0 Comments

நளவெண்பா – கதையும் கருத்தும்

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்

மேலும் படிக்கநளவெண்பா – கதையும் கருத்தும்
9 Comments