தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை 'உண்டு உறங்கி இடர் செய்து செத்து' முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; 'நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே' என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

மேலும் படிக்கதேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
0 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். ஓமெனப் பெரியோர்கள் -- என்றும்    ஓதுவ தாய்,…

மேலும் படிக்கபிரம்மம் என்றால் என்ன
0 Comments
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் விளக்கம்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Agni Kunjondru Kanden Bharathiyar Kavithai அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல்    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்      - மகாகவி பாரதியார் எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை,…

மேலும் படிக்கஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
0 Comments