கந்த சஷ்டி கவசம் – பதவுரை
"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூல், முருகக் கடவுளின் பக்தர்கள் பலராலும் தினமும் பாராயணம் செய்து போற்றப்படும் அழகிய நூலாகும். இந்நூலைப் பலகோடி அன்பர்கள் பக்தியோடு பாடித் துதித்து குமரக்கடவுளின் அருளால் தீய சக்திகளினால் உண்டாகும் துயரம் நீங்கி வாழ்வில் வளம் பெற்றுள்ளனர். இத்தகைய அருள்வாய்ந்த நூலுக்கு சொற்பொருள் விளக்கம் அளிக்க இந்தப் பதிவில் முயன்றுள்ளேன். அருள்கூர்ந்து இப்பதிவினைப் படித்து, குற்றம் குறைகளைப் பொறுத்து, தங்கள் பொன்னான கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.