நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
"நான் சராசரி மனிதர்களைப் போல இழிவாழ்க்கை வாழப் பிறந்தவன் அல்ல; புகழ்வாழ்க்கை வாழ்ந்து செயற்கரிய செயல் புரிந்து இந்த மானுடத்தை உயர்த்த வந்தவன். அதனால் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வாழ்ந்து மடியும் மூடர்களைப் போல 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'" என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்கும் துணிவும் துடிப்யும் மிகுந்த இந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை இங்கு ஆய்ந்து பார்ப்போம்.