A Translation of Thayumanavar’s songs
1. பரிபூரண ஆனந்தம்
சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு வாகவந்து சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந் திரும்புமோ தொடுவழக்காய்ச் சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது சிரத்தைஎனும் வாளும்உதவிப் பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப் பாதுகாத் தருள்செய்குவாய் பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே.
பொருள்
பார்க்கும் இடம் எங்கும் = எல்லா இடங்களிலும்
ஒரு நீக்கம் அற நிறைகின்ற = ஒருபோதும் நீங்காமல் நிறைந்திருக்கின்ற
பரிபூரண ஆனந்தமே = முழுமுதல் பேரின்ப வடிவானவனே!
சந்ததமும் = எப்போதும்
எனது செயல் = என் செய்கைகள் எல்லாம்
நினது செயல் = நீ செய்யும் செயலே!
யான் எனும் தன்மை = ‘நான்’ என்று சொல்லப்படும் என் இயல்பு
நினை யன்றி யில்லாத் தன்மையால் = நீயின்றி அமையாததால்
வேறலேன் = உன்னிலிருந்து வேறுபட்டவன் நான் அல்லேன் (நானும் நீயும் ஒன்றே)
வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே = வேதாந்தமும் சித்தாந்தமும் ஒரே விதமாக உரைக்கும் உண்மை இதுவே.
இந்தநிலை தெளிய = இந்த தெளிவுற்ற மெய்ஞான நிலையை அடைவதற்கு
நான் நெக்குருகி வாடிய = நான் பட்ட கடுந்துன்ப துயரங்களின்
இயற்கை = கொடுமையான தன்மையை
திருவுளம் அறியுமே = உன் திருவுள்ளம் அறியும் (நான் பட்ட துயரங்கள் நீ அறிவாய்)
இந்நிலையிலே சற்று இருக்க என்றால் = (கஷ்டப்பட்டு அடைந்த) இந்த தெளிந்த நிலையில் சிலகாலம் இருக்கலாம் என்றால்
மடமை = அறியாமையானது
இத சத்ருவாக வந்து = அந்த பேரின்பத்தைக் குலைக்கும் பகையாக வந்து
சிந்தை குடிகொள்ளுதே = என் மனத்தைப் பிடித்துக் கொண்டு ஆள்கிறதே!
மலமாயை = மனமாசுகளும் மாயையும்
கன்மம் = கர்ம வினைப் பலன்களும்
திரும்புமோ = என்னை மறுபடியும் வந்து வாட்டுமோ
தொடுவழக்காய் = மீண்டும் மீண்டும் தொடர்ந்து தோன்றி
சென்மம் வருமோ = பிறவிகள் பல எடுக்க நேரிடுமோ
எனவும் யோசிக்குதே மனது = இவ்வாறெல்லாம் என் மனம் நினைத்து நினைத்து அஞ்சி நடுங்குகிறது.
சிரத்தை எனும் வாளும் உதவி = சிரத்தை (நம்பிக்கை மற்றும் முழுகவனம்) என்னும் வாளை எனக்கு அளித்து
பந்தமற = பற்றுகள் அனைத்தையும் ஒழித்து
மெய்ஞ்ஞான தீரமும் தந்து = உண்மை அறிவுடன் கூடிய வல்லமையும் கொடுத்து
எனைப் பாதுகாத்து அருள்செய்குவாய் = என்னை (மறுபிறவிகள் தோன்றாமல்) காப்பாற்றி அருளவேண்டும்!

English Translation
O Omnipresent Being who fill all things with Heavenly Bliss!
My actions are always Yours, because I can never live independent of You,
I am not separate from You,
– This is the stage where Vedanta and Siddhanta can be understood to be identical.
To reach that high stage, You know that I have struggled hard and suffered very much.
If I try a little to make my mind stay in that stage, Ignorance, the destroyer of Bliss, gets hold of me again.
So, I am afraid that Mala (the Filth that is born out of Mind’s vice and impurity) and Maya (the illusion born out of worldly desires) and Karma (the fruits of the past deeds) will pursue me and cause my rebirths.
You should protect me, therefore,
by granting me the true knowledge with which I can surely put an end to my rebirths.

2. சின்மயானந்த குரு
அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி தழுதழுத் திடவணங்குஞ் சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையும் தண்ணருள் கொடுத்தாள்வையோ துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள் தொழுதருகில் வீற்றிருப்பச் சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே சொரூபானு பூதிகாட்டிச் செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர் சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.
பொருள்
அங்கைகொடு மலர்தூவி = அழகிய கைகளைக் கொண்டு மலர்களைத் திருவடியில் தூவி
அங்கமது புளகிப்ப = உடல் சிலிர்த்து மயிர்க்கூச்செறிய
அன்பினால் உருகி = காதலால் உள்ளம் உருகி
விழிநீர் ஆறாக = இன்பக்கண்ணீர் அருவியாக வழிந்தோட
வாராத முத்தியினது = யாருக்கும் கிடைக்க அரிதான வீடுபேற்றை அடையவேண்டுமென்கின்ற
ஆவேச ஆசைக் கடற்குள் மூழ்கி = ஆன்மவெறி கொண்ட ஆசை என்னும் கடலில் மூழ்கி
சங்கர சுயம்புவே சம்புவே = சங்கரனே! சுயம்புவே! சம்புவே!
எனவுமொழி = என்று வாயார வாழ்த்தி
தழுதழுத்திட வணங்கும் = நாக்குத் தழுதழுக்க வணங்குகின்ற
சன்மார்க்க நெறியிலாத் = (நன்னெறியில் வாழ்பவர்களுக்கு அருள்கின்றவனே!) அத்தகைய அந்த சன்மார்க்கத்தைப் பேணாமல்
துன்மார்க்கனேனை = தீயநெறியில் கிடந்து தவிப்பவனான எனக்கும்
தண்ணருள் கொடுத்தாள்வையோ = உன் குளிர்ந்த நல்லருளைக் கொடுத்து ஆட்கொள்வாயோ?
துங்கமிகு பக்குவ = உயர்ந்த மெய்ஞ்ஞானப் பக்குவம் வாய்ந்த
சனகன்முதல் முனிவோர்கள் = மிதிலை அரசன் சனகன் முதலான முனி சிரேஷ்டர்கள்
தொழுதருகில் வீற்றிருப்ப = உன்னை வணங்கி வழிபட்ட நிலையில் உன் திருவடிக்கீழ் இருக்கும்போது
சொல்லரிய நெறியை = நாவால் விவரிக்க முடியாத சன்மார்க்க நெறியை
ஒரு சொல்லா லுணர்த்தியே = ஒரே ஒரு சொல்லைக் கொண்டு அறிவுறுத்தி
சொரூப அனுபூதி காட்டி = உண்மைப் பேரின்ப நுகர்வினைக் உணர்த்தி அருளி
செங்கமல பீடம் மேல் = செம்மையும் மேன்மையும் நிறைந்த ஒரு சிறந்த இருக்கைமீது அமர்ந்துபடி
கல்லால அடிக்குள் வளர் = கல்லால மரத்தடியில் எழுந்தருளியிருக்கின்ற
சித்தாந்த முத்திமுதலே = சித்தாந்தம் போற்றும் வீடுபேற்றினை அளிக்க வல்ல முழுமுதல் கடவுளே!
சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே = உயிர்கள் எல்லாம் செம்மையுற்றுத் தெளிவதன் பொருட்டுத் திருச்சிராப்பள்ளியில் எழுதருளியிருக்கும் தக்ஷிணா மூர்த்தியே!
சின்மயானந்த குருவே = ஞானமும் ஆனந்தமும் நல்கும் சின்மயானந்த குருவே!
English Translation:
O Dakshina Murthy, O The Eternal Guru who is knowledge and bliss,
For the sake of the souls seeking Your Divine Grace, You manifested Yourself in Thiruchirapalli!
O The absolute giver of the Moksha which is announced in the Siddhanta Philosophy!
Sitting on an exalted seat under the Banyan tree,
You revealed in one sacred word the true spiritual knowledge
And You also showed the Supreme Eternal Bliss to be attained and enjoyed from such a knowledge.
You gave this knowledge to full-matured sages and King Janaka, who stood worshipping before You.
But I doubt whether I will be ever able to find shelter in Your Grace,
Because I have not made myself worthy of Your blessings,
As I have not been worshipping You in that kind of ecstatic emotional devotional state that brings forth Bliss,
Nor I am offering flowers to you with my tears of love raining down and my tongue blabbing Your names such as
O Sankara! O Swayambhu! O Sambhu!